நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, November 6, 2014

கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...

ராதேக்ருஷ்ணா ...
பக்தரின் ஆசியோடு, பகவானின் சொத்தாக வாழவேண்டிய நாள் வந்தது...
இந்த நாளை திருமலை அனந்தாழ்வானின் கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...
திருமலை அனந்தாழ்வான், ஸ்வாமி இராமானுஜரின் ஆசைப்படி, திருமலை திருப்பதியில் பகவான் மலையப்பனுக்கு மாலை கட்டும் கைங்கர்யம் செய்ய மனைவியோடு சென்றார்....
அப்போது அவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும் கூட அனந்தாழ்வானோடு ஏரி வெட்டும் கைங்கர்யத்தில், மண்ணை கூடையில் எடுத்துச் சென்று வேறிடத்தில் கொட்டும் பணியைச் செய்துவந்தார்...
அப்போது பகவான் பாலாஜீ தானே ஒரு சிறுவனாக அவருக்கு உதவ வந்தார். ஆனால் அனந்தாழ்வான் மறுத்துவிட்டதால், அவருக்குத் தெரியாமல், அவர் மனைவியிடமிருந்து மண் கூடையை பாதி வழியில் வாங்கி அவருக்கு உதவி செய்தார்....
அதை அறிந்த அனந்தாழ்வான் மனைவியின் பின்னால் ஒளிந்திருந்து, சிறுவனைப் பிடிக்க, அவன் இவரிடமிருந்து தப்பித்து ஓடினான். விடாமல் துரத்திய அனந்தாழ்வான் கடுங்கோபத்தில், அச்சிறுவன் மீது கடப்பாரையை வீச, அது அவன் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது...
அச்சிறுவன் சன்னிதியில் ஓடி மறைந்தான். அப்போது மலையப்பனின் தாடையில் ரத்தம் வழிய, பக்தர்கள் பதறினார்கள். உடனே அனந்தாழ்வான் தன் கையினால் பகவானின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை மருந்தாக இட்டார்...
அன்றிலிருந்து திருமலை நாதனுக்கு தாடையில் பச்சைக்கற்பூரம் இடும் வழக்கம் உண்டாயிற்று...
இன்றும் திருமலை கோயிலின் ராஜகோபுர வாசலில் அநந்தாழ்வானின் இந்தக் கடப்பாரைத் தொங்கவிடப்பட்டுள்ளது...
பக்தனின் கையிலிருந்து கிளம்பி, பகவான் மலையப்பனை அழுத்தமாக முத்தமிட்ட பவித்திரமான கடப்பாரை பாகவதரே...
அடியேனும், திருமலையில் ஏதேனும் ஒரு மூலையில் பக்தி செய்துகொண்டிருக்க அருள் செய்யுங்கள்…


Radhekrishna. ...
A day to live as the property of Lord with the blessings of Devotee has arrived.
Let's offer this protecting day to Sri Ananthazhwaan's crowbar. ..
To fulfil the wishes of Swami Ramanuja, Sri Ananthazhwaan went to Tirumala Tirupathi along with his wife to serve Lord Srinivasan...
Sri Ananthazhwaan started digging to form a lake for the garden. His wife carried the basket with mud & helped him eventhough she was 9 months pregnant.
So Lord Srinivasan came as a little boy to help them. But Sri Ananthazhwaan refused. So the boy convinced his wife in midway to help her. Sri Ananthazhwaan got angry by knowing this. So he hid himself behind her & caught the boy red-handed...
The boy escaped from him & started running. So Sri Ananthazhwaan got wild & threw the crowbar at Him. That crowbar hit the boy's chin & blood started oozing out...
The boy ran in to the sanctum sanctorium & vanished. Next moment blood started oozing out from Lord Srinivasan's chin...
Everyone realised the boy was none other than Lord. Then Sri Ananthazhwaan applied Camphor over His chin....

From that day onwards applying of camphor to Lord Srinivasan had started...
Even now the crowbar is hanging near by the Rajagopuram main entrance door of Tirumala Tirupathi. ..
Hey Divine Crowbar, you have flown from Sri Ananthazhwaan's hands & gave a strong kiss to Lord Srinivasa... Please bless me to be something in Thirumala near by Lord Srinivasa…
Relationship day

ராதேக்ருஷ்ணா …

நாம் பகவானை நம் பதியாக ஏற்கும் நாள் வந்தது...
இன்றைய மங்களகரமான தினத்தை, பகவானை பதியாக வரித்தத் துளசி தேவிக்கு சமர்ப்பணம் செய்வோம்...
இன்று துளசி தேவிக்கும், பகவான் நாராயணனுக்கும் கல்யாண நாள்...
துளசி தேவி திருப்பாற்கடலைக் கடையும்போது உற்பத்தியானவள்...
ஒரு துளசி தளத்தை பகவான் திருவடியில் இட்டால், மோக்ஷமே கிடைக்கும்...
க்ருஷ்ண ப்ரிய துளசி தேவியே...உன்னை சரணடைந்த என்னை க்ருஷ்ணனுக்குக் கல்யாணம் செய்துகொடுத்து விட்டு உன்னுடைய தாசியாய் ஏற்றுக்கொள்….
Radhekrishna....
A day to accept Lord Krishna as husband for our souls....
Let's offer this relationship day to Thulsi Devi, wife of Lord Narayana....
Today is the marriage day of Smt. Thulsi Devi & Lord Narayana....
Thulsi Devi was born during the churning of Milky ocean...
By offering a thulsi leaf to Lord Krishna you can attain Moksha.
Hey Krishna's lovable Thulsi Devi... 
Please arrange my marriage with Krishna and accept me as your servant....
கல் மண்டபத்திற்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
அனந்தபத்மநாப ஸ்வாமியின் திருவடியே சரணம்...
பகவான் நம்மை வைத்திருக்கும் இடத்தில் இருந்துகொண்டு பக்தி செய்யும் நாள் இது....
இந்த நாளை திருவனந்தபுரத்தில் சங்குமுகம் கடற்கரையில் அனந்தபத்மநாப ஸ்வாமி ஆராட்டுக்கு வந்து இளைப்பாறும் கல் மண்டபத்திற்கு சமர்ப்பணம் செய்வோம்....
இன்று அனந்தபத்மநாப ஸ்வாமியின் ஆராட்டு...
6 மாதத்திற்கு ஒரு முறை பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு 6கிமீ தொலைவில் உள்ள சங்குமுகம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்...
இதில் மிக அற்புதமான விஷயம் ஒன்று.... பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி திருவனந்தபுரம் ஆகாய விமான நிலையம் உள்ளே 
நுழைந்து விமானம் செல்லும் வழியில் வெளியில் வருவார்...பகவான் கடலில் நீராடித் திரும்பிச்செல்லும் வரை ஆகாயவிமானங்கள் எதுவும் வரவோ, செல்லவோ கூடாது...

சங்குமுகம் கடற்கரையில் இருக்கும் கல்மண்டபத்தில் பகவான் பத்மநாபர் இளைப்பாறிவிட்டு, கடலில் பக்தரோடு நீராடுவார்....
பகவான் 6 மாதத்தில் ஒரு முறையே இந்த கல்மண்டபத்திற்கு வருவார்...
அந்த கல்மண்டபம் பகவானின் தியானத்தோடு தான் இருக்குமிடத்தில் இருக்கும்...
ஹே சங்குமுகம் பக்த கல்மண்டபமே.... உன்னப்போல் அடியேனும் பகவானின் வரவுக்காக காத்திருக்கும்படியான உத்தம பக்தியைத் தா…

Radhekrishna,
Pranams at the holy feet of sri Ananthapadmanabha...
Today is the day of bhagavan letting us do bhakthi from the place where we are..
Let us offer this day to the granite mantap at Shankumukham.
Today is sri anantha padmanabhaswami's Aaraattu....

Sri Ananthapadmanabha swami comes to shankumukham to have a holy dip in the sea there once in 6 months...the very important thing is there won't be any take off or landing of flight from the airport during that period as Sri Ananthapadmabha goes only through the airport...
After some rest at this Granite mantap Padmanabhan will have holy dip in the sea with his thousands of bhakthas
Though Padmanabhan vomes tothis mantap once in 6onths it maintains thesanctity through out the year with bhagawaddhyanam...

Hey mantap let me also have this pure bhakthi to wait for the bhagavan's arrival...வேட்டையாடும் நாள்

ராதேக்ருஷ்ணா ....
ஜெய் அனந்தபத்மநாப ஸ்வாமி....
இன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...
இந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....
இன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...
பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...
பகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....
என்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....

வேட்டை உற்சவம் வீடியோ...
Watch "Palli Vetta. Sri Padmanabhaswamy Temple." on YouTube - Palli Vetta. Sri Padmanabhaswamy Temple.: http://youtu.be/hzyUKKRLr4oThursday, October 30, 2014

A day to hunt

Radhekrishna. ….

Jai Sri Ananthapadmanabha..
A day to hunt our negative qualities like lust, anger, fear, jealousy lack of faith etc, has arrived. ..
Let's offer this Hunting day to the divine Bow & Arrow of Lord Sri Ananthapadmanabha swami. ...
Tonight around 8 pm is the Vettai Urchavam (Hunting Festival) in Thiruvananthapuram. ...
Lord Ananthapadhmanabha Swami will come out of His temple for Hunting along with Sri Narasimma Swamy and Sri Krishna from Western entrance. ...
Hey Divine Bow & arrow please come to me & destroy all the bad things in me...
Please bless me to become a true lover of Lord Ananthapadhmanabha. ..


ராதேக்ருஷ்ணா ....
ஜெய் அனந்தபத்மநாப ஸ்வாமி....
இன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...
இந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....
இன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...
பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...
பகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....
என்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....

வேட்டை உற்சவம் வீடியோ…Intimate day

Radhekrishna. ...
A day to live near by Lord has come.
Let's offer this intimate day to "Ambari Mukappu" ( carrier mounted on elephant) of Kuthira maliga of Maharaja Swathi ThirunaaL. ...
Sri Padhmanabha Dhasa Sri Maharaja Swathi ThirunaaL built a new palace (Puthen Maaliga) known as Kuthira Maaliga (Horse Palace) adjacent to Sree Anantha Padhmanabha Swami Temple to enjoy the almighty's presence....
In that Kuthira Maaliga there is a balcony known as Ambaari Mukappu facing Lord Sree Padhmanabha Swami temple....
Maharaja Swathi ThirunaaL used to sit & meditate Lord Ananthapadhmanabha Swamy sitting in that Ambaari Mukappu. He wrote many slokas & songs on Lord from that Ambaari Mukappu. ....
Hey fortunate Ambaari Mukappu Balcony you are the strong bondage between the devotee and almighty...
Please strengthen my bondage with my Lord Ananthapadhmanabha..


ராதேக்ருஷ்ணா ....
பகவானுக்கு அருகில் வாழும் ஒரு நாள் வந்தது....
இந்த நாளை பத்மநாப தாசர் மஹாராஜா ஸ்வாதி திருநாளின் அம்பாரி முகப்புக்கு சமர்ப்பிப்போம்...
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின் கிழக்கு வாசலுக்கருகில் மஹாராஜா ஸ்வாதி திருநாள், தான் பகவான் அருகிலிருக்க ஆசைப்பட்டு, குதிரை மாளிகை என்னும் அரண்மனையைக் கட்டினார்...
அந்தக் குதிரை மாளிகையில் "அம்பாரி முகப்பு"என்னும் ஒரு பலகனி ஒன்று உண்டு. அங்கிருந்து பார்த்தால் ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கோயில் அழகாகத் தெரியும்...
அம்பாரி முகப்பிலிருந்து மஹாராஜா ஸ்வாதி திருநாள், பத்மநாபனை த்யானம் செய்வார். பகவானைப் பற்றி பல ஸ்தோத்திரங்களையும், கீர்த்தனைகளையும் அம்பாரி முகப்பிலிருந்து எழுதினார்...
பகவானுக்கும் பக்தனுக்கும் நெருக்கமான அம்பாரி முகப்பே...
எனக்கும் என் ஸ்வாமி அனந்தபத்மநாபனுக்கும் நெருங்கின பந்தம் செய்வாயாக…Serving day

Radhekrishna. …

Jai Sree Padhmanabha Swami. ...
A day to offer everything to the almighty & to live as His servant has come....
Let's offer this offering & serving day to Travancore King Sri Anizham ThirunaaL Marthanda Varma Maharaja..
In 1750AD on January 17th, Travancore King Sri Anizham ThirunaaL Marthanda Varma Maharaja came to Sri Ananthapadmanabha Swamy temple & offered his Sword & prayed thus: " Hey Shree Ananthapadhmanabha Swamy. ..from now onwards You are the king to this dynasty. Myself and my heirs will be your servants. This Travancore is your property & responsibility. " This incident is known as 'Thiruppadi dhaanam".
From that day onwards the Travancore royal family's title is 'Sree Padhmanabha dasa"....
Sree Padhmanabha Dasa Anizham ThirunaaL Marthanda Varma Maharaja. ..please bless me to be born in your royal family to become a Sree Padhmanabha Dasa in one janma….

ராதேக்ருஷ்ணா ...
பகவானுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து அவருடைய தாசனாக வாழும் நாள் வந்தது....
இந்த தாசனாகும் நாளை திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின் அற்புத பக்தரான, திருவிதாங்கூர் ராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜாவுக்கு சமர்ப்பிப்போம்...
கிபி 1750 ஜனவரி 17 அன்று திரு அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜா, திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில், ஒற்றைக்கல் மண்டபத்தில் தன்னுடைய உடைவாள், கேடயம் இவற்றை வைத்து " அனந்தபத்மநாப ஸ்வாமி....இன்று முதல் இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜா நீங்களே....நானும் என் வம்சத்தாரும் இனி என்றும் உன்னுடைய வேலைக்காரர்கள்...இந்த ராஜ்ஜியம் உம்முடைய சொத்து...இனி உங்கள் பொறுப்பு..." என்று ப்ரார்த்தனை செய்தார்...
இந்த நிகழ்ச்சிக்கு "திருப்படிதானம்" என்று பெயர்....

அன்றிலிருந்து இன்று வரை திருவிதாங்கூர் ராஜ பரம்பரைக்கு "பத்மநாப தாசர்கள்" என்றே பட்டப் பெயர்....
அனந்தபத்மநாப ஸ்வாமிக்கு எல்லாவற்றையும் தந்த பத்மநாப தாசர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜரே...
ஒரு முறை உங்கள் வம்சத்தில் பிறந்து பத்மநாப தாசனாக வாழ எனக்கு ஒரு ஆசீர்வாதம் செய்யுங்களேன்…


Sunday, October 26, 2014

சஹோதரி சுபத்ரா தேவிக்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனை சஹோதரனாகவும் அனுபவிக்கும் நாள் வந்தது...

இந்த நாளை க்ருஷ்ணனின் ப்ரிய சஹோதரி சுபத்ரா தேவிக்கு சமர்ப்பணம் செய்வோம்....இன்று ப்ராத்ரு த்விதீயை (சகோதர த்விதீயை).சகோதரர்களுக்காக சகோதரிகள் ப்ரார்த்திக்கும் நாள்....
சுபத்ரா தேவி வசுதேவருக்கும், ரோஹினி தேவிக்கும் பிறந்தவர்...
சுபத்ரா தேவி அர்ஜுனனின் மனைவி, அபிமன்யுவின் தாயார்...
புரீ ஜகன்னாதன் க்ஷேத்திரத்தில், ஜகந்நாதனுக்கும், பலராமருக்கும் நடுவில் இருப்பது சுபத்ரா தேவியே...
ஹே சுபத்ரா தேவி...அடியேனும் க்ருஷ்ணனை சகோதரனாக அனுபவித்து, விளையாடி, உரிமையோடு திட்டி, சண்டை போட்டு, சமயத்தில் அவன் மடியில் தூங்கி, ஆனந்தமாக வாழ இன்று எனக்கு உரிமையோடு ஆசீர்வதியுங்கள்…
Radhekrishna. ...
A day to enjoy Krishna as our brother has come...

Let's offer this brotherhood day to Srimathi Subhadra Devi, Lord Krishna & Sri Balram's lovable sister. ...Today is Braathru Dwitheeyai .. (Brotherhood Dwitheeyai like Raksha Bandhan)
Subhadra devi was the daughter of Sri Vasudeva & Smt. Rohini devi....
Subhadra devi was wife of Arjun & mother of Abhimanyu...
In Puri Jagannath kshethra, Srimathi Subhadra Devi is in between Lord Jagannath & Sri Balarama...
Hey Srimathi Subhadra Devi. ...please bless me to enjoy Krishna as my brother to fight with Him, to pacify Him, to play with Him, to argue & diacuss with Him, to sleep with Him etc..


சனாதன கோஸ்வாமிக்கு சமர்ப்பணம் ....

ராதேக்ருஷ்ணா ...
நம் உடலை வருத்திக்கொள்ளாமல் பக்தி செய்யும் நாள் வந்தது...
இந்த கோவர்த்தன பூஜா தினத்தை, தினமும் கோவர்த்தன கிரியை வலம் வந்த பாகவத பக்தன், க்ருஷ்ண சைதன்யரின் ப்ரிய சிஷ்யர் சனாதன கோஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்வோம்....
சனாதன கோஸ்வாமி தனது தள்ளாத வயதிலும் விடாமல் கோவர்த்தன கிரியை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்....
ஒரு கோடைக் காலத்தில், வெய்யிலில் உடல் தளர்ந்து போய், கிரிவலப் பாதையில் களைத்து உட்கார்ந்தார்...
அப்போது அங்கே பகவான் க்ருஷ்ணர் ப்ரத்யக்ஷமாகி, தானே கோவர்த்தனத்தின் ஒரு சிறிய பாறையின் மீது நின்று,தன் திருவடி அடையாளங்கள் பதித்து சனாதன கோஸ்வாமிக்குத் தந்தார்...
அன்றிலிருந்து சனாதன கோஸ்வாமி அந்த கோவர்த்தன பாறையை தன் கடைசி காலம் வரை வலம் வந்தார்...
அந்த பவித்திரமான கோவர்த்தன பாறை இன்றும், வ்ருந்தாவனத்தில் ராதா தாமோதர் கோயிலில் இருக்கிறது... இந்தப் பாறயை 4 முறை வலம் வந்தால் கோவர்த்தன மலையை 1முறை வலம் வந்ததற்கு சமம்...
தள்ளாத வயதிலும், வைராக்கியத்தோடு கோவர்த்தன கிரி வலம் செய்த சனாதன கோஸ்வாமி மஹராஜ்...
அடியேனும் எல்லா ஜன்மங்களிலும் கோவர்த்தன கிரிவலம் மட்டும் செய்துகொண்டிருக்க அருளுங்கள்…

Radhekrishna. ....
A day to enjoy Lord Krishna's grace without straining our body & mind has arrived. ...

Let's offer this happy Govardhan Pooja day to Sri Sanathan Goswami (disciple of Sri Krishna Chaithanya Mahaprabu) who did Govardhana Giri Parikrama (round about) till his last breath....
Everyday Sri Sanathan Goswami used to do Govardhan Giri Parikrama even in his old age. During one hot sunny day in Giri Parikrama, he was so tired & sat on the Parikrama path...
At that time Krishna came & advised him to stop the tedious penance of Giri Parikrama at that old age. But Sanathan Goswami was not able to give up his vow of Giri Parikrama...
So Krishna stood on a small Govardhan Shila (rock) & started playing flute. Because of this extraordinary divine music the rock started melting & had the foot prints of Lord Krishna, hoof print of calf, imprint of Flute & imprint of cowherd Stick. Till his last breath, Sri Sanathan Goswami did Parikrama to this rock....
This sacred Govardhan Rock is still in Radha Damodhar temple in Vrindhavan. If you did 4 Parikrama to this Govardhan Shila (rock), it's equal to one Govardhan Giri Parikrama ( roughly 21 kms)...
Sri Sanathan Goswami Maharaj. ..please bless me to do Govardhan Giri Parikrama daily in all births…


Blesssed day

ராதேக்ருஷ்ணா ...
ஜெய் சீதாராம்....

பகவானின் திருவடிகளே நம்மை ரக்ஷிக்கும் நாள் தீபாவளியாக வந்தது...
இந்த உயர்ந்த தீபாவளியை பகவான் ராமனின் பாதுகைக்கு சமர்ப்பணம் செய்வோம்...
பகவான் ராமன் வனவாசம் முடிந்து திரும்பும் வரை, பரதன் பகவான் ராமனின் பாதுகையை வைத்துதான் 14 வருஷங்கள் ராஜ்யத்தைக் கவனித்தார்...
பாதுகாதேவி ஆண்ட 14 வருஷங்கள், பூமி அத்தனை சுபிக்ஷமாய் இருந்தது...
அதனால் தான் நிகமாந்த மஹாதேசிகரும் ஓரிரவில் 1000 ஸ்லோகங்களால் பாதுகா தேவியின் பெருமையை "பாதுகா சஹஸ்ரம்" என்ற நூலாய் எழுதினார்...
உலகையே சுமக்கும் பகவானையே சுமக்கும் பாதுகையே...
என்னையும் உன்னைப்போல் எப்போதும் பகவானை மட்டுமே சுமக்கும்படி செய்வாயாக….


Radhekrishna. ...
Jai Sri Sitha Ram. ..

Today is a blesssed day & Lord's lotus feet is with us to safeguard...
Let's offer this protecting day to Lord Rama's Paadhuka (Sacred Wooden Shoes)... Celebrate Diwali with a secured feeling. ...
When Lord Rama had gone to forests for 14years VanaVasa, His younger brother Bharatha prayed & received Lord Rama's Paadhuka to rule the Kingdom. ....
The 14years rule by Lord Rama's Paadhuka was the golden period of the universe...
That's why Sri Nigamantha Mahadesika wrote 1000slokas on Lord Ranganatha's divine Paadhuka over night.....
Hey powerful Paadhuka Devi...you are bearing the whole weight of Lord who is bearing the whole universe....
Please make me to bear the Lord only in my mind forever…Happy Krish Diwali...

ராதேக்ருஷ்ணா .....
பகவான் க்ருஷ்ணன் நம்மை வந்து அடையும் நாள் வந்தது....
இந்த நாளை பகவான் க்ருஷ்ணனால் ரக்ஷிக்கப்பட்ட 16100 கன்னிகைளுக்கு அர்ப்பணம் செய்வோம்...

நரகாசுரனால் பல தேசங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த, 16100 கன்னிகைளுக்கு விடுதலையும், க்ருஷ்ண தரிசனமும் கிடைத்த நாளே தீபாவளி....
16100 கன்னிகைகளும் க்ருஷ்ணனிடம் ப்ரார்த்தித்து, அவனையே கணவனாக அடைந்தனர்..
பகவான் க்ருஷ்ணனும் 16100 ரூபங்கள் எடுத்துக்கொண்டு, 16100 கன்னிகைகளையும் ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்துகொண்டார்....
க்ருஷ்ணனின் ப்ரிய 16100 பட்ட மஹிஷிகளே...
என்னையும் சம்சாரத்திலிருந்து மீட்டு, க்ருஷ்ணனின் ப்ரிய சொத்தாக்கிவிடுங்கள்...

இனிய சுதந்திர தீபாவளி வாழ்த்துக்கள்...
அழகிய க்ருஷ்ண தரிசன தீபாவளி வாழ்த்துக்கள்…


Radhekrishna....
A day to welcome Krishna to our place & heart has arrived...
Let's offer this welcoming day to 16100 women who were rescued by Krishna....
Demon king Narakasura kidnapped 16100 women from various nations & kept them in Prakjyothisha puram...Those 16100 women got Krishna Dharshan & freedom from Naraka...That day is Diwali...
16100 women prayed to Krishna to marry them. So Krishna took 16100 forms & married 16100 women on same time...
Hey blessed 16100 queens, please rescue me from this Samsara & make me Krishna's favourite property...
Happy Krish Diwali...
1382035_10152412224626631_3006327244158980633_n

Monday, October 20, 2014

அன்பை உணரும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
பகவான் நம் மீது வைத்திருக்கும் அன்பை உணரும் நாள் அழகாய் வந்தது...
இந்த நாளை நாம் பகவான் ராமனால் சீதையை மீட்க கடலில் கட்டப்பட்ட "ராம் சேது'விற்கு சமர்ப்பணம் செய்வோம்...
நாம் பகவானை நம்பி, நாம் இருக்குமிடத்தில் இருந்துகொண்டு,அவர் நாமம் ஜபித்திருந்தால், நிச்சயமாக பகவான் நம்மை காக்கத் தானே எல்லா முயற்சிகளும் செய்வார் என்பதற்கு "ராமர் பாலமே" மிகச்சிறந்த சாட்சி....
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான ஒரே காதல் சின்னம் "ராமர் பாலமே"...ஆம்...சீதையின் மீதுள்ள காதலால் தானே பகவான் ராமன் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே வானரங்களைக் கொண்டு இந்த பாலத்தைக் கட்டினார்...
மிதக்கும் கற்களாலான ராமர் பாலமே...
சம்சார சாகரத்தின் இக்கரையிலிருக்கும் எனக்கும், என் மீது அக்கறை கொண்ட பகவானுக்கும், இடையே நீயே காதல் பாலம்....என் பகவானை என்னிடம் அழைத்து வா...
Radhekrishna. ...
Jai Sitha Ram. ...
A day to realize the love of our Lord has arrived....
Let's offer this lovely day of our life to "Ram Sethu", The bridge constructed by Lord Ram to rescue Seetha Devi...
Be in your place; Chant His holy names; He Himself will put all the necessary efforts to rescue you...Ram Sethu is daily conveying this wonderful message to us...
Ram Sethu is the biggest & the oldest love symbol of the world....Yes...Lord Ram constructed this bridge with the help of monkeys between Bhaarath & Srilanka. ...
Hey Lovable Ram Sethu...you have been constructed by floating rocks...
I'm in this shore of this Samsara. You are the love bridge between me & my Lord...please bring my lovely Lord to me....

White paper

ராதேக்ருஷ்ணா ....
ராம் க்ருஷ்ண ஹரி... வாசுதேவ ஹரி...
மனதைக் காகிதமாக்கி அதில் பகவானின் பெருமையை எழுதி வைக்கும் நாள் கிடைத்தது....
இந்த பக்திபூர்வமான நாளை சந்த் துகாராமின் கைப்பட்ட பரம பாவனமான காகிதத்திற்கு சமர்ப்பணம் செய்வோம்...
சந்த் துகாராம் தானே தன் கையால் அபங்கம் எழுதிய காகிதங்கள் பரம பாக்கியம் பெற்றவை....
சந்த் துகாராம் தான் எழுதிய அபங்கங்களை, ஒரு ப்ராம்மணர் தூக்கி எறியச் சொன்னார் என்பதற்காக எல்லாவற்றையும் இந்திரயாணி நதியில் எறிந்துவிட்டார்....
அந்த அபங்கம் எழுதின காகிதங்கள் எல்லாம் சில நாட்கள் கழித்து இந்திரயாணி நதியில் மிதந்து வந்தன. பக்தர்கள் எல்லோரும் பரவசத்துடன் அந்த காகிதங்களை பக்தியோடு எடுத்துக்கொண்டனர்....
அந்த பக்திமயமான அபங்க காகிதங்கள் இன்றும் தேஹு விட்டலன் கோவிலில் பொக்கிஷமாக இருக்கிறது....
சந்த் துகாராமின் கைகளில் பட்டு, அவரால் விட்டலன் பெருமைகளை பத்திரமாக சுமக்கும் பாக்கியம் மிகுந்த காகிதங்களே...
என் மனதையும் உங்களைப் போல நல்ல காகிதமாக்கி விட்டலன் மகிமையை சந்த் துகாராம் எழுத ஒரு பாக்கியம் அருளுங்கள்..
Radhekrishna. ...
Ram Krushna Hari...
Vasudeva Hari. ..
A day to make our mind as a white paper to write Lord Vittal's grace & love...
Let's offer this day to fortunate papers which were used by Santh Thukaram to write abhang about Lord Vittal...
Santh Thukaram wrote many Marathi abhangs on papers. ...
Once a jelousy brahmin scolded Santh Thukaram & insisted him to throw all his abhangs in Indrayaani river.
Santh Thukaram threw all the papers in Indrayaani river....
After few days those abhang papers floated in Indrayaani river. Devotees picked those papers as a special gift from Lord Vittal...
Those abhang manuscripts are preserved & kept in Dehu Vittal temple...
Hey fortunate Abhang Manuscripts of Santh Thukaram. ..
Please bless my mind to become a good paper... So it can be used by Santh Thukaram to write about Lord Vittal.....A day to chant

ராதேக்ருஷ்ணா ...
"க்ருஷ்ணா" என்னும் நாமத்தை விடாமல் ஜபித்து நிம்மதியாய் வாழும் நாள் வந்தது...
இந்த நாம ஜப நாளை பரத்வாஜ ரிஷிக்கும், அவர் மனைவி சுசீலாவுக்கும் பிறந்த கர்க மஹரிஷிக்கு சமர்ப்பணம் செய்வோம்...
நந்தகோபரின் குல புரோஹிதர் கர்க மகரிஷி...
பகவான் பிறந்த 4மாதங்களில் வசுதேவரின் ப்ரார்த்தனைக்கிணங்க, கோகுலம் வந்தார் கர்க மஹரிஷி....
அப்போது அவரை வரவேற்று உபசரித்து நந்தகோபரும் யசோதா மாதாவும் தங்கள் குழந்தைக்கும், ரோஹிணியின் குழந்தைக்கும் பெயர் வைக்க கர்க மஹரிஷியிடம் ப்ரார்த்தித்தனர்...
உடனே கர்க மஹரிஷியும் த்யானம் செய்து கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிய, வசுதேவர் ரோஹிணி பெற்ற பிள்ளைக்கு "பலராமன்" என்றும், நந்தகோபர் யசோதா பிள்ளைக்கு "க்ருஷ்ணா" என்றும் பெயர் வைத்தார்...
பகவானுக்கு க்ருஷ்ணன் என்று பெயர் வைக்கும் பாக்கியம் பெற்ற மஹரிஷி கர்கரே....
அடியேன் எப்போதும் விடாமல் "க்ருஷ்ணா...க்ருஷ்ணா...க்ருஷ்ணா..." என்று ஜபித்துக்கொண்டேயிருக்க பூரணமாய் ஆசீர்வதியுங்கள்...
Radhekrishna. ...
A day to chant "Krishna" continuously has arrived. ...
Let's offer this Chanting day to Garga Maharishi, Son of Sage Bharathwaja & Smt . Suseela...
Garga Maharishi was the family priest if Sri Nandgagopa...
After Lord's birth, Sri Vasudeva requested Sri Garga Maharishi to go to Gokulam. ...
Sri Nandgagopa welcomed Sri Garga Maharishi with due respects..
Sri Nandgagopa & Smt Yashodha prayed Sri Garga Maharishi to name their son along with Sri Vasudeva & Smt Rohini's son....
Sri Garga Maharishi meditated & gave named the babies as "Balram" & "Krishna"...
Hey fortunate Garga Maharishi. ....please bless me whole heartedly to chant "Krishna" continuously forever...

Thursday, October 16, 2014

மதுரமான நாள்

ராதேக்ருஷ்ணா ...
மனதை க்ருஷ்ணனிடத்தில் தந்து, அவனுடைய அழகான லீலைகளை அனுபவிக்கும் மதுரமான நாள் உதயம்...
இந்த மதுரமான க்ருஷ்ணாணுபவ தினத்தை, கும்பகோணம் அருகிலுள்ள ஊத்துக்காடு கிராமத்தில் ப்ரத்யக்ஷமாக க்ருஷ்ணனின் காளிய நர்த்தனத்தை அனுபவித்த க்ருஷ்ண கான பக்தரான வேங்கட கவிக்கு சமர்ப்பணம் செய்வோம்....

ஸ்வயம் நாரத மஹரிஷியே கலியுகத்தில் ஊத்துக்காடு வேங்கட கவியாக அவதரித்தார்...
க்ருஷ்ணன் தன் லீலைகளை ப்ரத்யக்ஷமாக காட்ட, அதை அனுபவித்து அப்படியே பாடி ஆனந்தப்பட்டவர் திரு ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்...

ஹே பக்த வேங்கட கவியே...
நீங்கள் தரிசித்து அனுபவித்த காளிய நர்த்தன க்ருஷ்ணனை கொஞ்சம் என்னிடம் அனுப்புங்கள்...
என் மனமும் காளியன் போல அடங்காமல் இருக்கிறது....அதை உங்கள் க்ருஷ்ணன் அடக்கித் திருத்திப் பணி கொள்ளட்டும்....

Radhekrishna. ...
A day to offer our mind to Krishna & to enjoy His special Leelas has just begun...
Let's offer this Krishna Leela day to Sri Oothukkadu Venkata Kavi, who has personally witnessed & enjoyed the Kaliya Nardhana & other leelaas of Lord Krishna...

Oothukkadu Venkata Kavi was the incarnation of Sage Naradha....
Krishna Himself showed all His leelas to Oothukkadu Venkata Kavi & he composed 100s of songs on His leelas...

Hey Baktha Venkata Kavi...
Please send your Kaliya Nardhana Krishnan to me...My mind too is behaving like Kaliya in ego, pride, lust, anger etc., Let your Krishna dance on it to change & rectify it permanently. ...

Oothukkadu website....

A day to Realize

ராதேக்ருஷ்ணா ...
ஹரி ஓம்...
சரீரத்தை பகவானை அடைவதற்கான உபகரணம் என்று உணர்ந்து பாகவதத்தை அனுபவித்து பக்தி செய்யும் நாள் வந்தது....
இந்த மஹத்துவமான தினத்தை, சரீரத்தை பகவத் ப்ரசாதமாகக் கொண்டு, பாகவதத்தோடு வாழ்ந்த என் செல்ல ஸ்வாமிஜீ பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிகளுக்குச் சமர்ப்பிப்போம்...

காஞ்சி மஹாபெரியவாளின் பூரண க்ருபையை அனுபவித்தவர் பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிஜீ...
பகவான் ரமணரின் செல்லக் குழந்தை பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிஜீ...
ஸ்வாமி சிவானந்தரோடு நெருங்கிப் பழகும் பாக்யம் பெற்றவர் பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிஜீ...
வசிஷ்ட குஹா ஸ்வாமி புருஷோத்தமனாந்த புரி ஸ்வாமிகளால் பாகவதத்தைப் பிரசாதமாக பெற்றவர் பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிஜீ...
பரம பூஜ்ய சாந்தானந்த புரி ஸ்வாமிஜீ...
உங்களோடு நாங்கள் இருந்த அந்த பக்திமயமான நிமிஷங்கள்,,,எங்கள் வாழ்வின் மீதி நாட்களை நடத்த ஆசீர்வதிர்யுங்கள்...

Radhekrishna. ....
Hari Om....

A day to Realize the use of body is to enjoy Bhaagawatham has arrived...
Let's offer this Bhaagawatham day to my well wisher Sri Shanthanandha Puri Maharaj who is an ardent follower of Srimadh Bhaagawatham. ...
His Holiness Sri Shanthanandha Puri Maharaj was blessed in childhood by Kanchi Mahaperiyavaa...
His Holiness Sri Shanthanandha Puri Maharaj was a favourite son of Bhagawan Ramana Maharushi...
His Holiness Sri Shanthanandha Puri Maharaj was very close to Swami Shivanandha....
His Holiness Sri Shanthanandha Puri Maharaj was fortunate enough to get Bhaagawatham as life's mission from Swami Purushothamananda of Vasishta Guha...
My dear Swami Shanthanandha Puri Maharaj. ...
We were blessed to spend precious & worthy devotional time with You....
Please bless us to lead the remaining life with those wonderful memories. ...

You used to say Hari Om means Hurry Home (Vaigundh)...
But why so hurry Swamiji….


திருப்பரிவட்டப் பாறைக்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
பாறை போல் திடமான மனதுடன் பகவானை நம்பி வாழவேண்டிய நாள் வந்தது...
இந்த நாளை திருக்குறுங்குடியில் இருக்கும் ஸ்வாமி இராமானுஜரின் திருப்பரிவட்டப் பாறைக்கு சமர்ப்பணம் செய்வோம்...

திருவனந்தபுரம் அனந்தபத்பநாப ஸ்வாமி கோயிலில், வைஷ்ணவ முறைப்படி பூஜா முறைகளை மாற்ற ஸ்வாமி இராமானுஜர் தீர்மானித்தார்...
அப்போது அங்கு தாந்திரீக முறைப்படி பூஜை செய்துகொண்டிருந்த போத்திமார்கள், பகவான் அனந்தபத்மநாபரிடம் சரணாகதி செய்தனர்...
அவர்களுக்காக ஸ்வாமி இராமானுஜரிடம் தூதுபோன அனந்தபத்மநாப ஸ்வாமி, திருவனந்தபுரத்தில் தாந்திரீக முறை பூஜையே நடக்கட்டும் என்று சொன்னார்....ஆனால் அதற்கு ஸ்வாமி இராமானுஜர் மறுத்துவிட்டதால், இரவோடு இரவாக அனந்தபத்மநாப ஸ்வாமி அவரை திருக்குறுங்குடியில் ஒரு பாறையில் கொண்டுவிட்டார்...
விடியும்போது விழித்த ஸ்வாமி இராமானுஜர் தான் அனந்தபத்மநாபனின் லீலையால் திருக்குறுங்குடியில் இருப்பதை உணர்ந்தார்...
உடனே தன் சிஷ்யன் வடுகநம்பியை நினைத்து "வடுகா" என்றழைத்தார்...
உடனே திருக்குறுங்குடி பெருமாள் சுந்தரபரிபூரண நம்பியே வடுக நம்பியாக வந்து ஸ்வாமி இராமானுஜரின் காவி வஸ்திரங்களைத் தோய்த்து, ஸ்வாமி இராமானுஜனுக்கு திருமண்ணும் இட்டுவிட்டார்...
ஹே திருப்பரிவட்ட பாறை பாகவதரே...
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி, காரேய் கருணை ஸ்வாமி இராமானுஜர், திருக்குறுங்குடி சுந்தரபரிபூரண நம்பி என்று இவர்களின் திவ்ய சம்மந்தம் பெற்றவரே...
உம்மைப் போல அடியேனும் அனுபவிக்க என்னை உனது குழந்தையாக பாவியுங்கள்...

Radhekrishna...
A day has come to live with a strong heart like a rock and with the belief in bhagawan.... let's offer this day to thirupparivattappari rock of Swami Ramanuja at Thirukkurungudi....

Swami Ramanuja wanted to change the pooja rituals at Thiruvananthapuram Sri Ananthapadmanabha swami temple according to vaishnava style...
But the priests of padmanabhaswami temple surrrendered to Sri Ananthapadmanabha swami not to change from thaanthreega style to vaishnava style...
So on their behalf Sri Padhmanabha Swami approached Sri Ramanuja and made a request not to change the present thaanthreega style of pooja rituals....
But Sri Ramanuja didn't accept it...Hence Sri Padmanabha shifted Swami Ramanuja over night ,while he was sleeping and placed him on the rock at Thirukkurungudi...
when Swami Ramanuja woke up in the morning, he was surprised to see him lying on the rock in Thirukkurungudi but immediately he understood the leela of Sri Padhmanabha Swamy and called for his favourite desciple Vaduga Nambi...
Immediately Lord Sundara Paripurna Nambhi Himself appeared in front of Swami Ramanuja as Vaduga and attended to him like washing his saffron clothes, putting thirumann on his forehead etc...
Hey fortunate & blessed Vattappara rock.....
having got the divine relationship of Thiruvananthapuram Lord Sri Ananthapadmanabha swami, Swami Ramanuja and Thirukkurungudi Lord Sundhara Paripoorana Nambi ,please treat me as your child to enjoy this divine relationship…..