நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, September 28, 2014

A melodious day

ராதேக்ருஷ்ணா…

மனதை வருடும், க்ருஷ்ணன் இஷ்டப்படி அவன் சொத்தாக வாழும் நாள் உதயமானது. இந்த இனிமையான தினத்தை, க்ருஷ்ணனை விட்டு ஒருபோதும் பிரியாத புல்லாங்குழலுக்கு சமர்ப்பிப்போம்.
வேணு, முரளி, வம்சி இவையெல்லாம் க்ருஷ்ணனின் புல்லாங்குழலின் நாமங்களே...
க்ருஷ்ணனின் ரஹஸ்ய செய்திகளை கோபிகைகளுக்கு கொண்டு செல்லும் தூதுவன் புல்லாங்குழலே...
ஹே முரளி...வேணு...வம்சி...
உன்னைப்போல் க்ருஷ்ணனின் அதராம்ருதத்தைக் குடித்துக்கொண்டு, அவன் கையிலே வாழ்ந்துகொண்டு, அவனிஷ்டப்படி வாழ எனக்கும் ஒரு வாய்ப்பு தா….


Radhekrishna. …

A melodious day of living as per Krishna's wish has just begun. Let's dedicate this peaceful day to Krishna's favourite Flute.
Vamsi, Murali & Venu are the names of Krishna's flute.
Krishna uses His flute as a messenger to convey His secret messages to Gopis.
Krishna used to play flute to attract all the living beings.
Hey Venu...Murali. ..Vamsi...
Please give me an opportunity to drink Krishna's lip nectar & to live as His property…



A day to face & win

ராதேக்ருஷ்ணா …

துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல், பக்தியோடு அவைகளை எதிர்கொண்டு, மனோ திடத்தோடு ஜெயிக்கும் நாள் உதயமாகிறது...
இந்த மனோ திடம் தரும் நாள், பஞ்ச பாண்டவர்களின் தாய், மஹாராஜா பாண்டுவின் மனைவி, வசுதேவரின் சகோதரி, க்ருஷ்ணனின் அத்தை, குந்தி தேவிக்கு சமர்ப்பணம்...
இளம் விதவையான குந்தி பட்ட கஷ்டங்கள் ஏராளம்...
ஆதரவு காட்டவேண்டிய சொந்தங்களே குந்திக்குக் கஷ்டங்களைத் தந்தனர்....
மஹாபாரதம் யுத்தம் முடிந்து க்ருஷ்ணன் துவாரகா கிளம்பும் சமயத்தில், க்ருஷ்ணனிடம் இன்னும் நிறைய நிறைய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் வரமாகக் கேட்ட தைரியமான பக்தை குந்தி தேவி...
ஹே குந்தி மாதா....உன்னைப்போல் எதற்கும் அசராத ஒரு மனதை எனக்குத் தா….


Radhekrishna. …

A day to face & win any kind of hurdles has begun. Let's offer this brave day to Queen Kunthi Devi...
Mother of Pandavas...
Wife of King Pandu...
Sister of Sri Vasudeva...
Aunty of Sri Krishna...
Queen Kunthi, a young widow suffered a lot...
The near & dear gave lot of problems to Queen Kunthi...
After Mahabharatha war She prayed to Krishna " Hey my dear Krishna. ...whenever, wherever, however possible, please give me more & more hurdles in life. So that i can enjoy your grace fully..."
Hey Kunthi Maathaa. ..please give me your brave & devotional mindset to me…

Offering day

ராதேக்ருஷ்ணா ...
பகவானுக்கு அன்போடு எதையாவது அழகாகத் தரும் நாள் உதயமானது. இன்றைய நாளை நாம் கோகுலத்தில் க்ருஷ்ணன் கொடுத்த சிறு தானியங்களுக்கு, ஆசை ஆசையாய், அவன் கையில் பலவித பழங்களை நிறைத்த அறிவொன்றுமில்லாத பழக்காரிக்கு சமர்ப்பித்து வாழ்வோம்.
தன் மீது அவள் கொண்ட பக்திக்கும், அவளுடைய பெரிய மனதுக்கும் கண்ணன் அவள் கூடையை நவரத்தினங்களால் நிறைத்தான்.
ஹே பாக்கியம் பெற்ற பழக்காரம்மா...
நானும் உன்னைப்போல் எதையும் எதிர்பார்க்காமல் கண்ணனுக்கு பிடித்ததைத் தர ஆசீர்வாதம் செய்யுங்கள்…


Radhekrishna. ...
The best offering day of our life has just begun. Let's offer this tasty day to the fruit vendor lady of Gokulam. She has filled Krishna's hands with tasty and wonderful fruits for the very little amount of grains He has given.
But Krishna fillled her basket with precious gems for her true love & sincere offerings.
Hey fortunate fruit vendor mom...
please bless me to offer Krishna's favourite to Him….



A day of devotion

ராதேக்ருஷ்ணா …

பொறுமையோடு பக்தி செய்து, பகவானின் கருணையை அனுபவிக்கும் நாள் உதயமானது. இந்த கருணாமயமான தினத்தை, 11 வருடங்கள் க்ருஷ்ண நாமம் ஜபித்து, கண்ணனின் தரிசினத்திற்காக காத்திருந்து, வ்ருந்தாவனத்திற்கு சென்று கண்ணனை அனுபவித்த பக்த சிகாமணி அக்ரூரருக்கு சமர்ப்பிப்போம்.
பாபி கம்சனின் மந்திரியாக இருந்தாலும், அக்ரூரரின் க்ருஷ்ண பக்தி துளியும் மாறவில்லை.
க்ருஷ்ணனை மதுராவிற்கு அழைத்துவர கம்சனே அக்ரூரரை வ்ருந்தாவனத்திற்கு அனுப்பினான்.
வ்ருந்தாவனத்தின் எல்லையில் க்ருஷ்ணனின் திருவடி அடையாளங்களைக் கண்டு, அதில் விழுந்து புரண்டு, அங்கப்ரதக்ஷிணம் செய்து அக்ரூரர் திளைத்தார்.
கண்ணனையும், பலராமனையும் மதுராவிற்கு அழைத்துச்செல்லும்போது, யமுனையில் அனுஷ்டானம் செய்யும்போது, தண்ணீருக்குள் க்ருஷ்ணனை திருப்பாற்கடல் நாராயணன் ரூபத்தில் தரிசித்தார்....
இப்படியொரு மாறாத க்ருஷ்ண பக்தியும், அற்புதமான க்ருஷ்ண தரிசனமும் கிடைக்க அக்ரூரரே எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்…


Radhekrishna. …

A day of devotion with patience and realizing Krishna's grace has started. Let's offer this graceful day to Shri Akroora, minister of Kamsa.
Akroora prayed for 11 years patiently to have Krishna's dharshan.
Kamsa himself sent Akroora to Vrindhavan to bring Krishna.
Akroora saw Krishna's foot prints in Vrindhavan & applied that holy dust of Krishna over his whole body.
Krishna did everything as expected by Akroora. 
Akroora saw Krishna as Lord Narayana in yamuna river.
Hey Akroora Maharaj. ..please bless me to have great patience in devotion. Let me enjoy Krishna's special grace…




பாக்கியமான நாள்

ராதேக்ருஷ்ணா …

நம் வாழ்வை பகவானுக்காக அர்ப்பணித்து, அவருக்கு ஆனந்தமாக கைங்கர்யம் செய்யும் பாக்கியமான நாள் உதயமானது. இன்றைய தினத்தை, சீதாமாதாவுக்காக, தன்னுடைய வயதான காலத்திலும் சளைக்காமல் இராவணனுடன் போராடி, உயிரை விட்ட கழுகரசனான ஜடாயுவுக்கு சமர்ப்பிப்போம்.
தன்னுடைய தந்தை தசரதரின் தோழனான ஜடாயுவை தன் பெரியப்பாவாக ஏற்று, ராமனே அந்திம காரியங்கள் செய்து, மோக்ஷம் தந்தார்.
ஹே ஜடாயு மஹாராஜா...உம்மைப் போல் பகவானுக்கு கைங்கர்யம் செய்ய ஆசீர்வதியுங்கள்…


Radhekrishna. …

Jai Sri Sitha Ram...
A prospective day of doing service to Lord has begun. Let's dedicate this enthusiastic day to the Eagle King Jataayu.
Jataayu fought sincerely & fiercefully with demon king Ravana to rescue Sitha Matha.
King Jataayu took his last breath on Rama's lap & attained Moksha.
Hey Jataayu Maharaj. ..please bless us to serve the Lord…



A day to realize

ராதேக்ருஷ்ணா …

பகவான் நம் மீது வைத்திருக்கும் அற்புதமான அன்பை உணர்ந்து, ஆனந்தமாக சிரித்துக்கொண்டே வாழும் நாள் உதயமானது. இந்த ஆனந்தமயமான நாளை, கண்ணனோடு ஆயர்பாடியிலும், வ்ருந்தாவனத்திலும் கூடி ஆடி விளையாடிக் களித்த அவனுடைய மாட்டுக்கார நண்பர்களுக்கு அர்ப்பணிப்போம்...
க்ருஷ்ணனோடு காட்டில் போஜனம் சாப்பிட்ட கோபகுமாரர்களே உங்களுக்கு நமஸ்காரம் ...
கண்ணனை விளையாட்டாக அடித்து, குத்துவிட்டு, கண்ணாமூச்சி எல்லாம் விளையாடின கோபால குழந்தைகளே உங்களுக்கு வந்தனம்...
கண்ணனுக்கு அலங்காரம் செய்ய, அவனுக்கு கை கால் பிடித்துவிட, அவன் உங்களை உப்பு மூட்டை தூக்க என்ன தவம் செய்தீரோ !!!
கண்ணனிடம் எங்களையும் தோழராக சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்யுங்களேன்...
நீங்கள் சொன்னால் கண்ணன் கேட்பான்....

Radhekrishna. …

A day to realize & enjoy the true love has just begun...
Let's offer this happiest day to Krishna's childhood friends of Vrindhavan...
The Gopakumaras were blessed enough to enjoy food with Krishna in Vrindhavan forests.
Gopakumaras were fortunate enough to sing, dance, swim & play with Krishna.
Hey Gopakumaras ! What penance you did to enjoy the omnipresent as a friend...
Please recommend to Krishna to accept us as His friends. ...
He is ever listening to your words….





Sunday, September 21, 2014

சுகமான நாள்

ராதேக்ருஷ்ணா ...
குருவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, க்ருஷ்ணனுக்காக காத்திருக்கும் சுகமான நாள் உதயமானது. இன்றைய தினத்தை, ஆஞ்சநேயர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, க்ருஷ்ணனுக்காக திரேதா யுகத்திலிருந்து, துவாபர யுகம் வரை காத்திருந்த கோவர்த்தன கிரிராஜனுக்கு சமர்ப்பிப்போம்.
ஹே கோவர்த்தன மலையே!
உன்னைப் போல் க்ருஷ்ணன் என் மீது விளையாட வேண்டும்...
உன்னைப் போல் என் மீது ராதிகா ராணியோடு அமரவேண்டும்....
உன்னைப் போல் க்ருஷ்ணன் என்னுள் ஒளிந்துகொள்ள வேண்டும்...
உன்னைப்போல் க்ருஷ்ணன் என்னை சுமக்கவேண்டும்....
உன்னைப்போல் க்ருஷ்ணனுக்காகவே நான் வாழ வேண்டும்....
ஹே கோவர்த்தனமே ....
உன்னை வந்தனம் செய்கிறேன் ....
எனக்குக் க்ருஷ்ணனைத் தா....

Radhekrishna. ...
A day òf unconditional faith in Guru's words & waiting patiently for Krishna has just begun. ...
Let's offer this faithful day to Govardhan Hill...Hey Govardhan. ..please bless me to have unconditional faith in Guru, like you had in Anjaneya...
Hey Govardhan. ... i want Krishna to play on me like you....
Hey Govardhan. ...i want Krishna to sit along with Radhika Rani in 
heart like you...
Hey Govardhan. ..i want Krishna to take rest in me like you.....
Hey Govardhan. ...i want Krishna to lift & hold me like you.....
Hey Govardhan. ...I want to be like you....
please bless me....
Please give me Krishna. 





மஹாத்மா ஜடபரதருக்கு சமர்ப்பிப்போம்!

ராதேக்ருஷ்ணா ...
பொறுமையைத் தந்து, மனதை அமைதிப்படுத்தும் நாள் உதயமானது. இந்த நாளை மஹாத்மா ஜடபரதருக்கு சமர்ப்பிப்போம். ராஜாவாக இருந்து, ரிஷியாகி, காட்டில் தவம் செய்தவர் ஜடபரதர். ஒரு மான் குட்டியை நதியிலிருந்து மீட்டு, அதை வளர்த்து, அபிமானத்தால் அதன் நினைவிலேயே உயிரை விட்டு, தானே மானாய் பிறந்தார். மான் பிறவியிலும் பக்தி செய்து, மீண்டும் மனிதராய் பிறந்து, ஜடம் போல யாரோடும் பழகாமல், பொறுமையோடு மனதை அடக்கி, அமைதியாக பக்தி செய்தார். அவமானங்களைப் பொருட்படுத்தாமல் மனதில் ஹரியை தியானித்த ஜடபரதரே! நாங்களும் மனதை வெல்ல பலம் தாருங்கள் ...

Radhekrishna. ...
A day of patience and peace has just begun. Let's offer this realization day to Sri Jadabaratha : the great king who did wonderful penance in forest. In mercy ,he rescued a fawn from river. But in due course he forgot his penance & started loving the deer. He became a deer in the next janma & realized his mistake. In the 3rd janma he was born as a human & acted like a mad man. But he did wonderful devotion. He was equal to everyone. Hail to Jada Bharatha....
Please bless us to realize the life...



 

Positive Day!

ராதேக்ருஷ்ணா ...
எது வந்தாலும் அஞ்சாத மனதோடு வாழ்ந்து ஜெயிக்கும் நாள் உதயமானது. பெற்ற தந்தையே படாதபாடு படுத்தினாலும், நாராயணன் மேல் வைத்த அசையாத நம்பிக்கையினால் எல்லாவற்றையும் ஜெயித்து, தூணில் நரசிம்மனைத் தரிசித்த, ப்ரஹ்லாதனுக்கு இன்றைய தினம் சமர்ப்பணம். ப்ரஹ்லாதா! உன் மனதை எமக்குத் தா...

Radhekrishna. ...
Jai Sri Prahladha. ...
A day of brave heart & unconditional faith has just begun. Let's dedicate this positive day to Prahladha. Though he was tortured by his own father, he never gave up his unconditional faith in Lord Narayana. For Prahladha's amazing faith Lord took Narasimma avathar in a pillar. Hey Prahladha Maharaj! Give your brave & positive heart to us...



Wednesday, September 17, 2014

Santh Raidas ki jai...

ராதேக்ருஷ்ணா ...

எங்கும், எதிலும், எல்லோரிடமும், ஹரியைக் காணும் நாள் உதயமானது. பக்திதான் உயர்ந்தது. இந்த பக்திபூர்வமான தினத்தை, செருப்புதைக்கும் தொழிலாளி, பாண்டுரங்கனின் ப்ரிய பக்தன், பக்த மீரா மாதாவின் குருவான சந்த் ரைதாசருக்கு சமர்ப்பிப்போம். விட்டலன் சந்த் ரைதாசரின் பக்திக்காக, ஒரு இரவில் 1000 ஜோடி செருப்புகள் தைத்தான்.
சந்த் ரைதாஸுக்கு ஜெய்....

Ram KRUSHNA Hari. ..
Vasudeva Hari. ..
A glorious day of enjoying Sri Hari in everything, everyone & everywhere has started. Let's offer this day to Santh Ravidas alias Raidas alias Rohidas. A cobbler by profession; Most lovable Vittal Devotee ; Sri Meera Maathaa's Guru;
Lord Vittal stitched 1000 pairs of shoes in a single night while listening to Santh Raidas's Bhajans.
Jai Ho Santh Raidas ki jai...



Tuesday, September 16, 2014

சுக ப்ரும்ம மஹரிஷிக்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
நம்மை நாம் உணரும் பொழுது விடிந்தது. பகவானை சுலபமாக,சுகமாக அடையும் வழியைக் காட்டும் நல்ல நாளும் வந்தது...
இன்றைய தினம் சுகமாயிருக்க வேதவ்யாசரின் மகனான,
ராஜா பரீக்ஷித்தின் குருவான,
ஜனகரின் சீடரான,
சுக ப்ரும்ம மஹரிஷிக்கு
சமர்ப்பணம் செய்வோம்...
பாகவதம் சொல்லாய் இளங்கிளியே...

Radhekrishna. ..
The day of realisation & rejuvenation has just started. To utilize the day happily, let's live with Sri Sukha Brahma Maharishi. 
Son of Sri VedhaVyasa;
Disciple of King Janaka;
Guru to King Pareekshith.
Jai Ho....
Hey Shuka Dheva...
please tell us Srimadh Bhaagawatham. …




Jai Hindh. ...


ராதேக்ருஷ்ணா ....
உண்மையும், உயர்வும், உழைப்பும், நம்பிக்கையும் தரும் நாள் உதயமானது. இந்த அழகான தினம் இந்து தர்மத்தை ஸ்தாபிதம் செய்ய முழுமூச்சாக போராடின நம் சத்திரபதி சிவாஜி மஹாராஜாவுக்கு சமர்ப்பணம் ...ஜெய் ஹிந்த்...
ஹிந்து என்று சொல்லுவோம்..
தலை நிமிர்ந்து வாழ்வோம்....

Radhekrishna. ...
A day of growth, efforts & success has begun. Let's offer this vibrant day to Sri Chathrapathi Shivaji Maharaj. The real warrior who fought for Hinduism & Hindhusthaan. Jai Hindh. ...
Be proud to be an Hindhu…

Service day...

ராதேக்ருஷ்ணா ...
நம்மை நல்ல வழியில் அழைத்துச் செல்லும் சத்தான நாள் உதயமானது. இந்த நாளை, நமக்கு நாரதரைத் தந்த உத்தமியான அவரது தாய்க்கு சமர்ப்பிப்போம். வீடுகளில் வேலை செய்து வாழ்ந்திருந்தாலும், தன் பிள்ளையை சத்சங்கத்தில் ஈடுபடுத்தின அந்த மஹோன்னதமான தாய்க்கு ஆயிரம் கோடி நமஸ்காரம்...

Radhekrishna...
A day of perfect guidance has started. Let's offer this service day to Sage Naradha's mother. She was a servant maid. Once she told her son Naradha to spend time in serving Gurus. Because of this instruction Naradha got Sathsang at the age of 5. Jai Ho... Let's bow down to world's best mother…





பீஷ்ம பிதாமஹருக்கு அர்ப்பணிப்போம்...


ராதேக்ருஷ்ணா ...
தைரியமும், வைராக்கியமும், நம்பிக்கையும் பூரணமாய் தரும் நாள் உதயமானது. இந்த அற்புதமான தினத்தை வைராக்கிய சிகாமணி பீஷ்ம பிதாமஹருக்கு அர்ப்பணிப்போம். க்ருஷ்ணனே பீஷ்மரின் சபதத்திற்காக தன் சபதத்தை விட்டான். மரண சமயத்தில், அம்பு படுக்கையில்,கண்ணன் கேட்க விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்ன பீஷ்மரே, உமக்கு கோடி நமஸ்காரம்...

Radhekrishna. ...
Day of passion & determination has just begun. Let's receive mental strength and unconditional faith by offering this day to Sri Bheeshma Pithamaha. Lord Krishna gave up His promise for Bheeshma's promise. Sri Bheeshma chanted Vishnu Sahasranama in death bed. Hail to Sri Bheeshma. …


Wednesday, September 10, 2014

சேனா நாவிதருக்கு அர்ப்பணம்


ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனோடு வாழும் நாள் உதயமானது. பாண்டுரங்கன் எவருடைய பக்திக்கு வசப்பட்டு, தானே ராஜாவுக்கு அவருடைய வேஷத்தில் சென்று நாவிதம் செய்தானோ, அந்த உத்தம சேனா நாவிதருக்கு இந்த நாளை அர்ப்பணம் செய்வோம்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா...விட்டலன் எல்லோருக்கும் சமமடி பாப்பா...

Radhekrishna. ...
The day to live with Lord Vittal is started. Let's offer this beautiful day to Santh Senaa Naavi (barber). For his devotion Lord Vittal Himself did barbering for the king in Sena Naavi's form. Let's live with passion for devotion. Caste & Religion are nothing before Vittal...

Tuesday, September 9, 2014

Live With Sudhama...

ராதேக்ருஷ்ணா ...
தன்னையே அர்ப்பிக்கும் அழகான நாள் உதயமானது. இள வயதில் க்ருஷ்ணனோடு ஒன்றாய் படித்து, க்ருஷ்ணனோடு விளையாடி, க்ருஷ்ணனோடு தூங்கி ஆனந்தமாய் இருந்த சுதாமாவிற்கு இன்று சமர்ப்பணம். எல்லோரும் கண்ணனிடம் கையேந்தி நிற்க, கண்ணனை தன்னிடம் அவலுக்காக கையேந்த வைத்து, அவனிடம் பக்தியைத் தவிர ஒன்றுமே ப்ரார்த்திக்காத சுதாமாவோடு இன்று வாழ்வோம். கண்ணன் நம் பேர் சொல்லி பெருமைப்படும்படி வாழ்வோம்...

Radhekrishna. ...
Wonderful day of offering is started. Let's offer this beautiful day to Krishna's childhood classmate, roommate & most lovable school friend Sudhama. Krishna grabbed rice flakes from him, but in return Sudhama demanded or requested nothing. Let's live with Sudhama to enjoy devotion of friendship.
 





குகப்பெருமாளுக்கு சமர்ப்பணம்...


ராதேக்ருஷ்ணா ...
தானாக அனுக்ரஹம் வந்து சேரும் நாள் உதயமானது. உலகில் துன்ப சாகரத்தில் தத்தளிக்கும் சம்சாரிகளுக்கு ஓடமான ராமனுக்கே ஓடம் ஓட்டின, ஓடக்காரர், வேடுவரான குகப்பெருமாளுக்கு இன்றைய தினம் சமர்ப்பணம்.
குகனிடம் பகவான் ராமன் "நீ என் உயிர் தோழன்" என்றார். குகன் போல் ராமனுக்கு ஓடக்காரனாவோம்...

Radhekrishna. ...
Jai Sri Ram...
A graceful day has just begun. Let's offer this wonderful day to Sri Guha, boat man of Lord Rama. He offered everything to Lord Rama with true love. So Lord Rama treated him as His true & close friend. Let's row a boat to Sri Ram, Smt Sitha & Sri Lakshmana like Sri Guha.

Sunday, September 7, 2014

Happy Onam Wishes...


ராதேக்ருஷ்ணா ...
சிறியதாய் தொடங்கி பெரியதாய் வளர்ந்து, உன்னைப் பக்குவப்படுத்தும் நாள் அழகாக உதயம். இந்த நாளை, திருவோணத்தில் வாமனனைப் பெற்ற கஷ்யபர், அதிதி தம்பதிகளுக்கு சமர்ப்பிப்போம். 
கச்யபர் அதிதி தேவி போலே பகவானை பிள்ளையாய் அனுபவிப்போம்.
இனிய திருவோண நன்னாள் வாழ்த்துக்கள் ...

Radhekrishna...
A small day with big blessings has started. Let's offer this great day to Lord Vamana's parents Smt Adhithi devi & Sage Kashyapa. Let's enjoy Lord as our son like them.
Happy Onam Wishes.

சஞ்சயனுக்கு இன்று சமர்ப்பணம்..


ராதேக்ருஷ்ணா ...
உன்னை நீ உணரும் உன்னத நாள் ஆரம்பம். தன்னை உணர்ந்து குரு க்ருபையால் க்ருஷ்ணனின் கீதையை நேரடியாகக் கேட்டு, தன் வாயால் அதை திருதராஷ்டிரனுக்குச் சொன்ன மஹா பக்தர் சஞ்சயனுக்கு இன்று சமர்ப்பணம். அவரைப் போல் கீதையை க்ருஷ்ணன் வாயால் கேட்க ப்ரார்த்தனை செய்....

அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே...

Radhekrishna. The day for realisation has started. Let's offer this day to Sri Sanjanya, charioteer of King Dhrutharashtra. Sri Sanjaya was blessed by Sri VedhaVyasa & listened to full Bhagawath Geeta told by Lord Krishna. Pray to listen to Geeta from Krishna. ..

கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே....


ராதேக்ருஷ்ணா ...
ஜெய் சீதாராம் ...
கடமையை ஆசையோடு செய்யும் உன்னத நாள் உதயமானது. இந்த நாள் கடமைகளை பகவானுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த மஹாராஜா ஜனகருக்கு (சீதா மாதாவின் தந்தை, பகவான் ராமனின் மாமனார்) சமர்ப்பணம். கடமையை செய்...கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே....

Radhekrishna. ..
Jai Sitha Ram...
Dutiful day has just started with great blessings. Let's offer this day to King Janaka of Mythila. Because of his duty conscious he got Goddess Sitha as daughter & Lord Ram as Son-in-law. Do your duties...