நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Tuesday, October 7, 2014

சரணாகதி செய்யும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
நம்முடைய தகுதியைப் பாராமல்,பகவானின் கருணையின் மீது நம்பிக்கை வைத்து, பகவானின் திருவடிகளில் பூரணமாய் சரணாகதி செய்யும் நாள் உதயமாகிறது...
இந்த அன்புமயமான திருநாளை, பகவான் ராமனிடம் சரணாகதி செய்த, நல்ல அரக்கனான விபீஷண ஆழ்வாருக்கு சமர்ப்பிப்போம்..
விபீஷணனை முன்னிறுத்தி, ராமன் "நான் உன்னைச் சேர்ந்தவன் என்று யார் என்னிடம் ஒரு முறை சரணாகதி செய்கிறாரோ, அவர்களுக்கு எல்லா விதத்திலும் அபயம் அளிக்கிறேன்...இது என்னுடைய விரதம்" என்று சரணாகதி அடையும் சுலபமான வழியைச் சொன்னார்....
விபீஷ்ண ஆழ்வாரின் பக்திக்கு வசப்பட்டு பகவான் ராமன், தன்னுடைய குல தெய்வமான ரங்கநாதரையே அவருக்குப் பரிசாகத் தந்தார்...
விபீஷ்ண ஆழ்வாரால்தான் நமக்கு ஶ்ரீ ரங்கராஜன் ஶ்ரீரங்கத்தில் குட திசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கிச் சயனித்து அருளுகிறார்...
பகவானின் ப்ரிய சகா விபீஷண ஆழ்வாரே...
அடியேனும் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, எம்பெருமான் திருவடிகளே கதி என்று விழ, தைரியத்தையும், குறைவில்லாத நம்பிக்கையும் தாருங்கள்...

Radhekrishna...
A day to rely on Lord's grace than our position has started. Let's offer this promising day to Sri Vibheeshana, dearest friend of Lord Ram...
Because of Sri Vibheeshana, Lord Ram revealed the secret of Total surrender as follows; " I will safeguard by all means,those who have surrendered to me once"....
For Sri Vibheeshana's devotion Lord Ram presented His Family deity Lord Ranganathan to him...
Lord Ranganatha residing in Srirangam & facing Sri Lanka for Sri Vibheeshana's sake...
Sri Vibheeshana Maharaja...
Give me brave & unconditional faith in Lord…



A stunning day

ராதேக்ருஷ்ணா ...
தைரியமாக சனாதன தர்மத்தைக் கடைபிடித்து பகவானிடம் சரணாகதி செய்யும் நாள் வந்தது...
இன்றைய தினத்தை திருமலையப்பனின் கோயில் மணியின் அவதாரமான நம் வேதாந்த தேதிகருக்கு சமர்ப்பணம் செய்வோம்...
ஸ்வாமி இராமானுஜரே, குடும்பத்தில் இருந்துகொண்டு பக்தி செய்யும் முறையை உபதேசிக்க, வேதாந்த தேசிகராய் அவதரித்தார்...
வைராக்கிய சீலரான நிகமாந்த மஹாதேசிகர், ரங்கநாயகியின் செல்லப்பிள்ளை ...
ஒரு இரவில் ரங்கநாதரின் பாதுகையை 1000 ஸ்லோகங்களால் துதி செய்தார்...
தூப்புள் அக்ரஹாரத்தில் அவதரித்த வைஷ்ணவ விளொக்கொளியே... உம்முடைய பிறந்தநாளில்,,, உம்மிடம் என்னைத் தந்தேன்...
பகவான் இஷ்டப்படி என்னைத் திருத்திப்பணி கொண்டு,,, அடியேனைக் கரையேற்றவும்...

Radhekrishna...
A stunning day with a stubborn mind to follow our Hinduism has just begun...
Let's offer this brave day to Sri Vedhantha Dhesikar, who is the incarnation of Lord Srinivasan's divine Bell...
Swami Ramanuja Himself came as Sri Vedhantha Dhesikar to show the simple path of devotion...
Sri Vedhantha Dhesikar is Goddess Ranganayagi's favourite child...
In a night Sri Vedhantha Dhesikar wrote "Paadhuka Sahasram" praising Lord Ranganatha's Padhuka...
Sri Sri Vedhantha Dhesika Swamin...I'm giving myself to you as a Birthday gift...please rectify me as per Lord Krishna's wishes and rescue me….




HARI SARVOTHAMMA... VAYU JEEVOTHAMA…

ராதேக்ருஷ்ணா ...
விஜயம் நம்மைத்தேடி வரும் நாள் வந்தது...இந்த விஜயதசமியை நம்மைக் கரையேற்ற ஆனந்தமாய் வந்து அவதரித்த ஶ்ரீ மத்வாசார்யருக்கு சமர்ப்பிப்போம்...
வாயு தேவனே...திரேதாயுகத்தில் ஹனுமானாகவும், துவாபரயுகத்தில் பீமனாகவும், கலியுகத்தில் மத்வாசார்யராகவும் அவதரித்தார்...
மத்வாசார்யார்தான் கோபீ சந்தனக்கட்டியில் ஒளிந்திருந்த ருக்மிணி தேவி தன் கையால் பூஜை செய்த க்ருஷ்ணனை, தன் பக்தியால் வெளிவரவைத்து, உடுப்பியில் ப்ரதிஷ்டை செய்தார்....
ஆனந்த தீர்த்த மத்வாசார்யரே... உம்மை சரணடைந்தேன்...
நான் எப்போதும்,எங்கும்,எதிலும் க்ருஷ்ணனை அனுபவிக்க ஆசீர்வதியுங்கள்....
ஹரி சர்வோத்தம...வாயு ஜீவோத்தம...

Radhekrishna. ....
A victorious day has begun...
Let's offer this precious day to Sri Madhwacharya, who was born on this auspicious Vijaya Dhasami day...
Vayu Deva born as Hanuman in Thretha Yuga, as Bheema in Dwapara Yuga & as Sri Madhwacharya in Kali yuga...
Because of Sri Madhwacharya's devotion, the hidden Krishna Idol in Gopichandan rock came out & He is our great Udupi Krishna...
Sri Sri Sri Madhwacharya prabho...
I'm surrendering to thy lotus feet...
please bless me to enjoy Krishna everywhere & in everything...
HARI SARVOTHAMMA...
VAYU JEEVOTHAMA…





பக்தி வளர்ந்துவரும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
பக்தி வளர்ந்துவரும் நாள் உதயமானது. இந்த ஞானம் தரும் சரஸ்வதி பூஜா தினத்தை, சுகப்ரும்ம மஹரிஷி, ராஜா பரீக்ஷித்துக்கு பாகவதத்தை எந்த ஆலமரத்தடியில் சொன்னாரோ, அந்த நிலையான தெய்வீகம் நிரம்பிய ஆலமரத்திற்கு சமர்ப்பிப்போம்...
ஹே தெய்விக ஆலமரமே...
நீ பூரணமாய் பாகவதம் கேட்டிருக்கிறாய்...
நீ சுகப்ரும்மத்தின் குரலைக் கேட்டிருக்கிறாய்...
நீ எல்லா ரிஷிகளையும் தரிசித்திருக்கிறாய்...
நீ எல்லா தேவர்களையும் உன் மீது சுமக்கிறாய்...
நீ பரீக்ஷித்து மோக்ஷமடைந்ததற்கு சாக்ஷி...
பாகவதத்தின் பெருமை நீயே உள்ளபடி அறிவாய்...
நீ எனக்கு சரஸ்வதி தேவியின் கடாக்ஷத்தையும், பாகவதத்தையும் பூரணமாய் தா....
ஏதேனும் ஒரு ஜன்மாவில் நான் உன் மடியில் ஒரு எறும்பாகவோ, பறவையாகவோ, வாழ அருள் செய்...

Radhekrishna. ...
A day to enjoy growth in devotion has begun brightly.
Let's offer this bright & Saraswathi Pooja day to the fortunate Banyan tree under which Sri Suka Brahma Maharishi told Srimadh Bhaagawatham to King Pareekshith...
Hey Blessed Banyan Tree...
You know Srimadh Bhaagawatham fully as it is...
You have enjoyed the melodius and divine voice of Sri Sukha Brahma Maharishi..
You were the eye witness of King Pareekshith's Moksha...
You have seen all the sages...
You are worshipped by all Devathas...
You please bless me to enjoy Goddess Saraswathi Devi's special grace & true wisdom of Srimadh Bhaagawatham. ..
Please give me a special permission to live on your lap as an ant or a bird in one janma....

Watch "Shukratal" on YouTube - Shukratal: http://youtu.be/vpNE5NhhUu4


Wednesday, October 1, 2014

Holy Day!

ராதேக்ருஷ்ணா …

மனதில் கண்ணன் வந்து நிற்கும் நாள் உதயமானது. இந்த நாளை கண்ணன் பாண்டுரங்கனாய் சந்திரபாகா நதிக்கரையில், எந்த செங்கல்லின் மீது நிற்கிறானோ, அந்த பாக்கியம் பெற்ற செங்கல்லுக்கு சமர்ப்பிப்போம்...
புண்டலீகன் விட்டலனுக்கு ஆசனமாய் தந்த செங்கல்லே...என் மனமும் ஒரு கல்லே...
விட்டலனைச் சுமந்து நிம்மதியாய் தொந்தரவின்றி வாழும் செங்கல்லே...
என் மனமென்னும் கல்லின் மீது பாண்டுரங்கனை நிற்க வை...
நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்...
யார் யாரையோ சுமந்த என் மனது, இனியாவது பண்டரீநாதனை மட்டும் சுமக்க உன் பந்துவாய் என்னை ஏற்றுக்கொள்….


Radhekrishna…

A day to hold Krishna on our mind has just begun. Let's offer this holy day to the Brick on which Lord Vittal is standing...
Hey fortunate Brick...
You are the seat and base for Lord Panduranga...
You are blessed enough to be touched and offered by Saint Pundaleeka for Lord Pandarinath. ...
Hey Devoted Brick...
My mind too is a stone. Kindly give your Vittal to stand on it...
For the time being you take rest & i will take care of Vittal...
Till now my mind has allowed many to stand on it....At least from now onwards let it have Vittal alone...
please accept me as your relative….




Meditating day

ராதேக்ருஷ்ணா ...
யாரோடு இருந்தாலும் மனதை கண்ணனிடம் மட்டுமே பூரணமாகத் தரும் நாள் வந்தது...
இந்த தினத்தை வேலைக்காரியின் மகனான, ஹ்ஸ்தினாபுரத்தின் மந்திரியான, வேதவ்யாசரின் பிள்ளையான, உத்தமர் விதுரருக்கு சமர்ப்பணம் செய்வோம்....
மஹாபாபிகள் நடுவே வாழ்ந்திருந்தாலும், மனதில் க்ருஷ்ணனையே தியானித்திருந்தார் விதுரர் ...
க்ருஷ்ணன் அவதார லீலைகளை முடித்துக்கொண்டு வைகுந்தம் கிளம்பும் சமயத்தில் விதுரரை பார்க்க ஆசைப்பட்டான் என்றால் விதுரரின் பக்தியை என்னவென்பது !!!
பாண்டவர் தூதனாக வந்த கண்ணன், விதுரரிடம் வந்து கையேந்தி அவர் தந்த கூழைக் குடித்தான...
திருதராஷ்டிரனுக்கும் பாகவத ரஹஸ்யத்தைச் சொல்லி வைராக்கியம் வரச்செய்தவர் விதுரர்...
மைத்திரேயரிடம் பாகவத ரஹஸ்யம் கேட்டவர் விதுரர்...
ஹே விதுரரே...உம்முடைய அஹம்பாவம் இல்லாத க்ருஷ்ண பத்தியில் திளைக்கும் நல்ல மனதை எனக்கு தானமாய் தாருங்கள்...

Radhekrishna. ...
The day to think about Lord Krishna at any cost has just begun...
Let's offer this meditating day to Sri Vidhura. ...
Son of a Servant Maid...
Maha Manthri of Hasthinapuram....
Blessed son of Sri VedhaVyasa. ...
When Krishna came as a messenger of Pandavas, He came to Vithura's home and ate his porridge.
During His depart to Vaikunda, Lord Krishna thought about Vithura....
Because of Vithura, Dhrutharashtra & Ganthari attained Moksha. ..
Sage Mithreya revealed all the secrets of devotion & Lord to Vithura...
Hey Vithura Mahatma. ...
Please give your pure & perfect Krishna devoted mind to me….




லக்ஷியத்தை அடையும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
விடாமுயற்சி செய்து லக்ஷியத்தை அடையும் நாள் உதயமானது.
இந்த நாளை விடாமுயற்சியினால், கங்கையை பூமிக்கு சிவபெருமானின் அருளோடு அழைத்துவந்த பகீரதன் ராஜாவுக்கு சமர்ப்பிப்போம்...
எத்தனை போராட்டங்கள் வந்தபோதும் தன் லக்ஷியத்திலிருந்து நழுவாதவர் பகீரதன்...
பகவான் ராமன் இந்த பகீரதன் வம்சத்தில் அவதரித்தவர்.
பகீரதனால் தான் இன்று நாம் கங்கையை அனுபவிக்கிறோம்.
தன்னுடைய மூதாதையரின் மேலிருந்த சாபத்தை மாற்றிக்காட்டினவர்....
ஹே பகீரத மஹாராஜா...உங்களைப்போல் மூதாதையருக்கு மரியாதை தரவும், விடாமுயற்சியே வாழ்வாகவும் வாழ எனக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் ...

Radhekrishna. ...
A day for endless efforts is started. Let's offer this effective day to King Bhageeratha...
King Bhageeratha did nonstop penance to bring Ganges to earth.
Because of Bhageeratha's efforts Lord Shiva accepted to reduce the force of Ganga by receiving her in His Jada.
Bhageeratha was Lord Ram's ancestor.
King Bhageeratha's penance gave Moksha to his Ancestors...
Hey King Bhageeratha. ..
please bless me to respect my ancestors tradition & Dharma. ...
please give me the strength to put sincere endless efforts. ..