நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, November 6, 2014

கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...

ராதேக்ருஷ்ணா ...
பக்தரின் ஆசியோடு, பகவானின் சொத்தாக வாழவேண்டிய நாள் வந்தது...
இந்த நாளை திருமலை அனந்தாழ்வானின் கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...
திருமலை அனந்தாழ்வான், ஸ்வாமி இராமானுஜரின் ஆசைப்படி, திருமலை திருப்பதியில் பகவான் மலையப்பனுக்கு மாலை கட்டும் கைங்கர்யம் செய்ய மனைவியோடு சென்றார்....
அப்போது அவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும் கூட அனந்தாழ்வானோடு ஏரி வெட்டும் கைங்கர்யத்தில், மண்ணை கூடையில் எடுத்துச் சென்று வேறிடத்தில் கொட்டும் பணியைச் செய்துவந்தார்...
அப்போது பகவான் பாலாஜீ தானே ஒரு சிறுவனாக அவருக்கு உதவ வந்தார். ஆனால் அனந்தாழ்வான் மறுத்துவிட்டதால், அவருக்குத் தெரியாமல், அவர் மனைவியிடமிருந்து மண் கூடையை பாதி வழியில் வாங்கி அவருக்கு உதவி செய்தார்....
அதை அறிந்த அனந்தாழ்வான் மனைவியின் பின்னால் ஒளிந்திருந்து, சிறுவனைப் பிடிக்க, அவன் இவரிடமிருந்து தப்பித்து ஓடினான். விடாமல் துரத்திய அனந்தாழ்வான் கடுங்கோபத்தில், அச்சிறுவன் மீது கடப்பாரையை வீச, அது அவன் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது...
அச்சிறுவன் சன்னிதியில் ஓடி மறைந்தான். அப்போது மலையப்பனின் தாடையில் ரத்தம் வழிய, பக்தர்கள் பதறினார்கள். உடனே அனந்தாழ்வான் தன் கையினால் பகவானின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை மருந்தாக இட்டார்...
அன்றிலிருந்து திருமலை நாதனுக்கு தாடையில் பச்சைக்கற்பூரம் இடும் வழக்கம் உண்டாயிற்று...
இன்றும் திருமலை கோயிலின் ராஜகோபுர வாசலில் அநந்தாழ்வானின் இந்தக் கடப்பாரைத் தொங்கவிடப்பட்டுள்ளது...
பக்தனின் கையிலிருந்து கிளம்பி, பகவான் மலையப்பனை அழுத்தமாக முத்தமிட்ட பவித்திரமான கடப்பாரை பாகவதரே...
அடியேனும், திருமலையில் ஏதேனும் ஒரு மூலையில் பக்தி செய்துகொண்டிருக்க அருள் செய்யுங்கள்…


Radhekrishna. ...
A day to live as the property of Lord with the blessings of Devotee has arrived.
Let's offer this protecting day to Sri Ananthazhwaan's crowbar. ..
To fulfil the wishes of Swami Ramanuja, Sri Ananthazhwaan went to Tirumala Tirupathi along with his wife to serve Lord Srinivasan...
Sri Ananthazhwaan started digging to form a lake for the garden. His wife carried the basket with mud & helped him eventhough she was 9 months pregnant.
So Lord Srinivasan came as a little boy to help them. But Sri Ananthazhwaan refused. So the boy convinced his wife in midway to help her. Sri Ananthazhwaan got angry by knowing this. So he hid himself behind her & caught the boy red-handed...
The boy escaped from him & started running. So Sri Ananthazhwaan got wild & threw the crowbar at Him. That crowbar hit the boy's chin & blood started oozing out...
The boy ran in to the sanctum sanctorium & vanished. Next moment blood started oozing out from Lord Srinivasan's chin...
Everyone realised the boy was none other than Lord. Then Sri Ananthazhwaan applied Camphor over His chin....

From that day onwards applying of camphor to Lord Srinivasan had started...
Even now the crowbar is hanging near by the Rajagopuram main entrance door of Tirumala Tirupathi. ..
Hey Divine Crowbar, you have flown from Sri Ananthazhwaan's hands & gave a strong kiss to Lord Srinivasa... Please bless me to be something in Thirumala near by Lord Srinivasa…
No comments:

Post a Comment