நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, November 6, 2014

கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...

ராதேக்ருஷ்ணா ...
பக்தரின் ஆசியோடு, பகவானின் சொத்தாக வாழவேண்டிய நாள் வந்தது...
இந்த நாளை திருமலை அனந்தாழ்வானின் கடப்பாறைக்கு சமர்ப்பிப்போம்...
திருமலை அனந்தாழ்வான், ஸ்வாமி இராமானுஜரின் ஆசைப்படி, திருமலை திருப்பதியில் பகவான் மலையப்பனுக்கு மாலை கட்டும் கைங்கர்யம் செய்ய மனைவியோடு சென்றார்....
அப்போது அவரின் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தும் கூட அனந்தாழ்வானோடு ஏரி வெட்டும் கைங்கர்யத்தில், மண்ணை கூடையில் எடுத்துச் சென்று வேறிடத்தில் கொட்டும் பணியைச் செய்துவந்தார்...
அப்போது பகவான் பாலாஜீ தானே ஒரு சிறுவனாக அவருக்கு உதவ வந்தார். ஆனால் அனந்தாழ்வான் மறுத்துவிட்டதால், அவருக்குத் தெரியாமல், அவர் மனைவியிடமிருந்து மண் கூடையை பாதி வழியில் வாங்கி அவருக்கு உதவி செய்தார்....
அதை அறிந்த அனந்தாழ்வான் மனைவியின் பின்னால் ஒளிந்திருந்து, சிறுவனைப் பிடிக்க, அவன் இவரிடமிருந்து தப்பித்து ஓடினான். விடாமல் துரத்திய அனந்தாழ்வான் கடுங்கோபத்தில், அச்சிறுவன் மீது கடப்பாரையை வீச, அது அவன் தாடையில் பட்டு ரத்தம் வழிந்தது...
அச்சிறுவன் சன்னிதியில் ஓடி மறைந்தான். அப்போது மலையப்பனின் தாடையில் ரத்தம் வழிய, பக்தர்கள் பதறினார்கள். உடனே அனந்தாழ்வான் தன் கையினால் பகவானின் தாடையில் பச்சைக் கற்பூரத்தை மருந்தாக இட்டார்...
அன்றிலிருந்து திருமலை நாதனுக்கு தாடையில் பச்சைக்கற்பூரம் இடும் வழக்கம் உண்டாயிற்று...
இன்றும் திருமலை கோயிலின் ராஜகோபுர வாசலில் அநந்தாழ்வானின் இந்தக் கடப்பாரைத் தொங்கவிடப்பட்டுள்ளது...
பக்தனின் கையிலிருந்து கிளம்பி, பகவான் மலையப்பனை அழுத்தமாக முத்தமிட்ட பவித்திரமான கடப்பாரை பாகவதரே...
அடியேனும், திருமலையில் ஏதேனும் ஒரு மூலையில் பக்தி செய்துகொண்டிருக்க அருள் செய்யுங்கள்…


Radhekrishna. ...
A day to live as the property of Lord with the blessings of Devotee has arrived.
Let's offer this protecting day to Sri Ananthazhwaan's crowbar. ..
To fulfil the wishes of Swami Ramanuja, Sri Ananthazhwaan went to Tirumala Tirupathi along with his wife to serve Lord Srinivasan...
Sri Ananthazhwaan started digging to form a lake for the garden. His wife carried the basket with mud & helped him eventhough she was 9 months pregnant.
So Lord Srinivasan came as a little boy to help them. But Sri Ananthazhwaan refused. So the boy convinced his wife in midway to help her. Sri Ananthazhwaan got angry by knowing this. So he hid himself behind her & caught the boy red-handed...
The boy escaped from him & started running. So Sri Ananthazhwaan got wild & threw the crowbar at Him. That crowbar hit the boy's chin & blood started oozing out...
The boy ran in to the sanctum sanctorium & vanished. Next moment blood started oozing out from Lord Srinivasan's chin...
Everyone realised the boy was none other than Lord. Then Sri Ananthazhwaan applied Camphor over His chin....

From that day onwards applying of camphor to Lord Srinivasan had started...
Even now the crowbar is hanging near by the Rajagopuram main entrance door of Tirumala Tirupathi. ..
Hey Divine Crowbar, you have flown from Sri Ananthazhwaan's hands & gave a strong kiss to Lord Srinivasa... Please bless me to be something in Thirumala near by Lord Srinivasa…
Relationship day

ராதேக்ருஷ்ணா …

நாம் பகவானை நம் பதியாக ஏற்கும் நாள் வந்தது...
இன்றைய மங்களகரமான தினத்தை, பகவானை பதியாக வரித்தத் துளசி தேவிக்கு சமர்ப்பணம் செய்வோம்...
இன்று துளசி தேவிக்கும், பகவான் நாராயணனுக்கும் கல்யாண நாள்...
துளசி தேவி திருப்பாற்கடலைக் கடையும்போது உற்பத்தியானவள்...
ஒரு துளசி தளத்தை பகவான் திருவடியில் இட்டால், மோக்ஷமே கிடைக்கும்...
க்ருஷ்ண ப்ரிய துளசி தேவியே...உன்னை சரணடைந்த என்னை க்ருஷ்ணனுக்குக் கல்யாணம் செய்துகொடுத்து விட்டு உன்னுடைய தாசியாய் ஏற்றுக்கொள்….
Radhekrishna....
A day to accept Lord Krishna as husband for our souls....
Let's offer this relationship day to Thulsi Devi, wife of Lord Narayana....
Today is the marriage day of Smt. Thulsi Devi & Lord Narayana....
Thulsi Devi was born during the churning of Milky ocean...
By offering a thulsi leaf to Lord Krishna you can attain Moksha.
Hey Krishna's lovable Thulsi Devi... 
Please arrange my marriage with Krishna and accept me as your servant....
கல் மண்டபத்திற்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
அனந்தபத்மநாப ஸ்வாமியின் திருவடியே சரணம்...
பகவான் நம்மை வைத்திருக்கும் இடத்தில் இருந்துகொண்டு பக்தி செய்யும் நாள் இது....
இந்த நாளை திருவனந்தபுரத்தில் சங்குமுகம் கடற்கரையில் அனந்தபத்மநாப ஸ்வாமி ஆராட்டுக்கு வந்து இளைப்பாறும் கல் மண்டபத்திற்கு சமர்ப்பணம் செய்வோம்....
இன்று அனந்தபத்மநாப ஸ்வாமியின் ஆராட்டு...
6 மாதத்திற்கு ஒரு முறை பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு 6கிமீ தொலைவில் உள்ள சங்குமுகம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்...
இதில் மிக அற்புதமான விஷயம் ஒன்று.... பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி திருவனந்தபுரம் ஆகாய விமான நிலையம் உள்ளே 
நுழைந்து விமானம் செல்லும் வழியில் வெளியில் வருவார்...பகவான் கடலில் நீராடித் திரும்பிச்செல்லும் வரை ஆகாயவிமானங்கள் எதுவும் வரவோ, செல்லவோ கூடாது...

சங்குமுகம் கடற்கரையில் இருக்கும் கல்மண்டபத்தில் பகவான் பத்மநாபர் இளைப்பாறிவிட்டு, கடலில் பக்தரோடு நீராடுவார்....
பகவான் 6 மாதத்தில் ஒரு முறையே இந்த கல்மண்டபத்திற்கு வருவார்...
அந்த கல்மண்டபம் பகவானின் தியானத்தோடு தான் இருக்குமிடத்தில் இருக்கும்...
ஹே சங்குமுகம் பக்த கல்மண்டபமே.... உன்னப்போல் அடியேனும் பகவானின் வரவுக்காக காத்திருக்கும்படியான உத்தம பக்தியைத் தா…

Radhekrishna,
Pranams at the holy feet of sri Ananthapadmanabha...
Today is the day of bhagavan letting us do bhakthi from the place where we are..
Let us offer this day to the granite mantap at Shankumukham.
Today is sri anantha padmanabhaswami's Aaraattu....

Sri Ananthapadmanabha swami comes to shankumukham to have a holy dip in the sea there once in 6 months...the very important thing is there won't be any take off or landing of flight from the airport during that period as Sri Ananthapadmabha goes only through the airport...
After some rest at this Granite mantap Padmanabhan will have holy dip in the sea with his thousands of bhakthas
Though Padmanabhan vomes tothis mantap once in 6onths it maintains thesanctity through out the year with bhagawaddhyanam...

Hey mantap let me also have this pure bhakthi to wait for the bhagavan's arrival...வேட்டையாடும் நாள்

ராதேக்ருஷ்ணா ....
ஜெய் அனந்தபத்மநாப ஸ்வாமி....
இன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...
இந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....
இன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...
பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...
பகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....
என்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....

வேட்டை உற்சவம் வீடியோ...
Watch "Palli Vetta. Sri Padmanabhaswamy Temple." on YouTube - Palli Vetta. Sri Padmanabhaswamy Temple.: http://youtu.be/hzyUKKRLr4oThursday, October 30, 2014

A day to hunt

Radhekrishna. ….

Jai Sri Ananthapadmanabha..
A day to hunt our negative qualities like lust, anger, fear, jealousy lack of faith etc, has arrived. ..
Let's offer this Hunting day to the divine Bow & Arrow of Lord Sri Ananthapadmanabha swami. ...
Tonight around 8 pm is the Vettai Urchavam (Hunting Festival) in Thiruvananthapuram. ...
Lord Ananthapadhmanabha Swami will come out of His temple for Hunting along with Sri Narasimma Swamy and Sri Krishna from Western entrance. ...
Hey Divine Bow & arrow please come to me & destroy all the bad things in me...
Please bless me to become a true lover of Lord Ananthapadhmanabha. ..


ராதேக்ருஷ்ணா ....
ஜெய் அனந்தபத்மநாப ஸ்வாமி....
இன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...
இந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....
இன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...
பகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...
பகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....
என்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....

வேட்டை உற்சவம் வீடியோ…Intimate day

Radhekrishna. ...
A day to live near by Lord has come.
Let's offer this intimate day to "Ambari Mukappu" ( carrier mounted on elephant) of Kuthira maliga of Maharaja Swathi ThirunaaL. ...
Sri Padhmanabha Dhasa Sri Maharaja Swathi ThirunaaL built a new palace (Puthen Maaliga) known as Kuthira Maaliga (Horse Palace) adjacent to Sree Anantha Padhmanabha Swami Temple to enjoy the almighty's presence....
In that Kuthira Maaliga there is a balcony known as Ambaari Mukappu facing Lord Sree Padhmanabha Swami temple....
Maharaja Swathi ThirunaaL used to sit & meditate Lord Ananthapadhmanabha Swamy sitting in that Ambaari Mukappu. He wrote many slokas & songs on Lord from that Ambaari Mukappu. ....
Hey fortunate Ambaari Mukappu Balcony you are the strong bondage between the devotee and almighty...
Please strengthen my bondage with my Lord Ananthapadhmanabha..


ராதேக்ருஷ்ணா ....
பகவானுக்கு அருகில் வாழும் ஒரு நாள் வந்தது....
இந்த நாளை பத்மநாப தாசர் மஹாராஜா ஸ்வாதி திருநாளின் அம்பாரி முகப்புக்கு சமர்ப்பிப்போம்...
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின் கிழக்கு வாசலுக்கருகில் மஹாராஜா ஸ்வாதி திருநாள், தான் பகவான் அருகிலிருக்க ஆசைப்பட்டு, குதிரை மாளிகை என்னும் அரண்மனையைக் கட்டினார்...
அந்தக் குதிரை மாளிகையில் "அம்பாரி முகப்பு"என்னும் ஒரு பலகனி ஒன்று உண்டு. அங்கிருந்து பார்த்தால் ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கோயில் அழகாகத் தெரியும்...
அம்பாரி முகப்பிலிருந்து மஹாராஜா ஸ்வாதி திருநாள், பத்மநாபனை த்யானம் செய்வார். பகவானைப் பற்றி பல ஸ்தோத்திரங்களையும், கீர்த்தனைகளையும் அம்பாரி முகப்பிலிருந்து எழுதினார்...
பகவானுக்கும் பக்தனுக்கும் நெருக்கமான அம்பாரி முகப்பே...
எனக்கும் என் ஸ்வாமி அனந்தபத்மநாபனுக்கும் நெருங்கின பந்தம் செய்வாயாக…Serving day

Radhekrishna. …

Jai Sree Padhmanabha Swami. ...
A day to offer everything to the almighty & to live as His servant has come....
Let's offer this offering & serving day to Travancore King Sri Anizham ThirunaaL Marthanda Varma Maharaja..
In 1750AD on January 17th, Travancore King Sri Anizham ThirunaaL Marthanda Varma Maharaja came to Sri Ananthapadmanabha Swamy temple & offered his Sword & prayed thus: " Hey Shree Ananthapadhmanabha Swamy. ..from now onwards You are the king to this dynasty. Myself and my heirs will be your servants. This Travancore is your property & responsibility. " This incident is known as 'Thiruppadi dhaanam".
From that day onwards the Travancore royal family's title is 'Sree Padhmanabha dasa"....
Sree Padhmanabha Dasa Anizham ThirunaaL Marthanda Varma Maharaja. ..please bless me to be born in your royal family to become a Sree Padhmanabha Dasa in one janma….

ராதேக்ருஷ்ணா ...
பகவானுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து அவருடைய தாசனாக வாழும் நாள் வந்தது....
இந்த தாசனாகும் நாளை திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமியின் அற்புத பக்தரான, திருவிதாங்கூர் ராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜாவுக்கு சமர்ப்பிப்போம்...
கிபி 1750 ஜனவரி 17 அன்று திரு அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜா, திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில், ஒற்றைக்கல் மண்டபத்தில் தன்னுடைய உடைவாள், கேடயம் இவற்றை வைத்து " அனந்தபத்மநாப ஸ்வாமி....இன்று முதல் இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜா நீங்களே....நானும் என் வம்சத்தாரும் இனி என்றும் உன்னுடைய வேலைக்காரர்கள்...இந்த ராஜ்ஜியம் உம்முடைய சொத்து...இனி உங்கள் பொறுப்பு..." என்று ப்ரார்த்தனை செய்தார்...
இந்த நிகழ்ச்சிக்கு "திருப்படிதானம்" என்று பெயர்....

அன்றிலிருந்து இன்று வரை திருவிதாங்கூர் ராஜ பரம்பரைக்கு "பத்மநாப தாசர்கள்" என்றே பட்டப் பெயர்....
அனந்தபத்மநாப ஸ்வாமிக்கு எல்லாவற்றையும் தந்த பத்மநாப தாசர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மஹாராஜரே...
ஒரு முறை உங்கள் வம்சத்தில் பிறந்து பத்மநாப தாசனாக வாழ எனக்கு ஒரு ஆசீர்வாதம் செய்யுங்களேன்…