நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, September 28, 2014

A day of devotion

ராதேக்ருஷ்ணா …

பொறுமையோடு பக்தி செய்து, பகவானின் கருணையை அனுபவிக்கும் நாள் உதயமானது. இந்த கருணாமயமான தினத்தை, 11 வருடங்கள் க்ருஷ்ண நாமம் ஜபித்து, கண்ணனின் தரிசினத்திற்காக காத்திருந்து, வ்ருந்தாவனத்திற்கு சென்று கண்ணனை அனுபவித்த பக்த சிகாமணி அக்ரூரருக்கு சமர்ப்பிப்போம்.
பாபி கம்சனின் மந்திரியாக இருந்தாலும், அக்ரூரரின் க்ருஷ்ண பக்தி துளியும் மாறவில்லை.
க்ருஷ்ணனை மதுராவிற்கு அழைத்துவர கம்சனே அக்ரூரரை வ்ருந்தாவனத்திற்கு அனுப்பினான்.
வ்ருந்தாவனத்தின் எல்லையில் க்ருஷ்ணனின் திருவடி அடையாளங்களைக் கண்டு, அதில் விழுந்து புரண்டு, அங்கப்ரதக்ஷிணம் செய்து அக்ரூரர் திளைத்தார்.
கண்ணனையும், பலராமனையும் மதுராவிற்கு அழைத்துச்செல்லும்போது, யமுனையில் அனுஷ்டானம் செய்யும்போது, தண்ணீருக்குள் க்ருஷ்ணனை திருப்பாற்கடல் நாராயணன் ரூபத்தில் தரிசித்தார்....
இப்படியொரு மாறாத க்ருஷ்ண பக்தியும், அற்புதமான க்ருஷ்ண தரிசனமும் கிடைக்க அக்ரூரரே எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள்…


Radhekrishna. …

A day of devotion with patience and realizing Krishna's grace has started. Let's offer this graceful day to Shri Akroora, minister of Kamsa.
Akroora prayed for 11 years patiently to have Krishna's dharshan.
Kamsa himself sent Akroora to Vrindhavan to bring Krishna.
Akroora saw Krishna's foot prints in Vrindhavan & applied that holy dust of Krishna over his whole body.
Krishna did everything as expected by Akroora. 
Akroora saw Krishna as Lord Narayana in yamuna river.
Hey Akroora Maharaj. ..please bless me to have great patience in devotion. Let me enjoy Krishna's special grace…




No comments:

Post a Comment