நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, September 21, 2014

மஹாத்மா ஜடபரதருக்கு சமர்ப்பிப்போம்!

ராதேக்ருஷ்ணா ...
பொறுமையைத் தந்து, மனதை அமைதிப்படுத்தும் நாள் உதயமானது. இந்த நாளை மஹாத்மா ஜடபரதருக்கு சமர்ப்பிப்போம். ராஜாவாக இருந்து, ரிஷியாகி, காட்டில் தவம் செய்தவர் ஜடபரதர். ஒரு மான் குட்டியை நதியிலிருந்து மீட்டு, அதை வளர்த்து, அபிமானத்தால் அதன் நினைவிலேயே உயிரை விட்டு, தானே மானாய் பிறந்தார். மான் பிறவியிலும் பக்தி செய்து, மீண்டும் மனிதராய் பிறந்து, ஜடம் போல யாரோடும் பழகாமல், பொறுமையோடு மனதை அடக்கி, அமைதியாக பக்தி செய்தார். அவமானங்களைப் பொருட்படுத்தாமல் மனதில் ஹரியை தியானித்த ஜடபரதரே! நாங்களும் மனதை வெல்ல பலம் தாருங்கள் ...

Radhekrishna. ...
A day of patience and peace has just begun. Let's offer this realization day to Sri Jadabaratha : the great king who did wonderful penance in forest. In mercy ,he rescued a fawn from river. But in due course he forgot his penance & started loving the deer. He became a deer in the next janma & realized his mistake. In the 3rd janma he was born as a human & acted like a mad man. But he did wonderful devotion. He was equal to everyone. Hail to Jada Bharatha....
Please bless us to realize the life... 

No comments:

Post a Comment