நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, September 28, 2014

A day to realize

ராதேக்ருஷ்ணா …

பகவான் நம் மீது வைத்திருக்கும் அற்புதமான அன்பை உணர்ந்து, ஆனந்தமாக சிரித்துக்கொண்டே வாழும் நாள் உதயமானது. இந்த ஆனந்தமயமான நாளை, கண்ணனோடு ஆயர்பாடியிலும், வ்ருந்தாவனத்திலும் கூடி ஆடி விளையாடிக் களித்த அவனுடைய மாட்டுக்கார நண்பர்களுக்கு அர்ப்பணிப்போம்...
க்ருஷ்ணனோடு காட்டில் போஜனம் சாப்பிட்ட கோபகுமாரர்களே உங்களுக்கு நமஸ்காரம் ...
கண்ணனை விளையாட்டாக அடித்து, குத்துவிட்டு, கண்ணாமூச்சி எல்லாம் விளையாடின கோபால குழந்தைகளே உங்களுக்கு வந்தனம்...
கண்ணனுக்கு அலங்காரம் செய்ய, அவனுக்கு கை கால் பிடித்துவிட, அவன் உங்களை உப்பு மூட்டை தூக்க என்ன தவம் செய்தீரோ !!!
கண்ணனிடம் எங்களையும் தோழராக சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்யுங்களேன்...
நீங்கள் சொன்னால் கண்ணன் கேட்பான்....

Radhekrishna. …

A day to realize & enjoy the true love has just begun...
Let's offer this happiest day to Krishna's childhood friends of Vrindhavan...
The Gopakumaras were blessed enough to enjoy food with Krishna in Vrindhavan forests.
Gopakumaras were fortunate enough to sing, dance, swim & play with Krishna.
Hey Gopakumaras ! What penance you did to enjoy the omnipresent as a friend...
Please recommend to Krishna to accept us as His friends. ...
He is ever listening to your words….

No comments:

Post a Comment