நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, October 16, 2014

A fruitful day

ராதேக்ருஷ்ணா ...
பாவங்கள் தொலைந்து, பகவானோடு ஆனந்தமாக விளையாடும் நாள் ஆசீர்வாதத்தோடு வந்தது...
இன்றைய சுபமான புரட்டாசி சனிக்கிழமையை, திருப்பதி பெருமாளோடு நித்தியம் தாயம் விளையாடின பக்த ஹாதிராம் பாவாஜீக்கு சமர்ப்பணம் செய்வோம்...
தினமும் பலதடவை வேங்கடாத்திரி, சேஷாத்திரி, வேதாத்திரி, கருடாத்திரி, ருஷபாத்திரி, அஞ்சநாத்திரி, ஆநந்தாத்திரி என்று ஏழு மலைகளின் திருநாமங்களை விடாமல் ஜபித்தவர் ஹாதிராம் பாவாஜீ...
தினமும் மலையப்பன், இரவில் ஹாதிராம் பாவாஜீயின் குடிசைக்கு வந்து விடியும் வரைதாயம் விளையாடுவார்....
ஹாதிராம் பாவாஜீயின் பக்திக்கு வசப்பட்டு அவர் மேல் சுமத்தப்பட்ட பழியைப் போக்க, பெருமாளே யானையாய் வந்து கட்டுக் கட்டாய் கரும்புகளைத் தின்றார்...
திருப்பதி பெருமாளின் விளையாட்டு தோழரான ஹாதிராம் பாவாஜீயே...
தூக்கத்தில் வீணாய் கழிகின்ற என் இரவை, உங்கள் பாலாஜீயோடு விளையாடிக் கழிக்க எனக்கு பக்தியைத் தாருங்கள்....

Radhekrishna. ...
A fruitful day to destroy our sins & enjoying games with Lord Balaji has begun with blessings...
Let's offer this hopeful day to Sri HaathiRam Baavaaji, with whom Lord Balaji played dice....
Sri HaathiRam Baavaaji daily used to recite the names of sacred 7 Hills of Thirumala as; Venkatadhri, Vedhadhri, Seshadri, Garudadhri, Vrushabhadhri, Anjanadhri & Anandhadhri...
Every day after night pooja, Lord of Thirumala, Balaji used to visit Sri HaathiRam Baavaaji's hut to enjoy playing dice...
To save Sri HaathiRam Baavaaji from insults, Lord Balaji incarnated as Elephant & ate bundles of sugar cane over night.
Hey Aachaarya Sri HaathiRam Baavaaji...
my nights are going in vain in sleep...
please give me your devotion to utilize my nights with Lord Balaji….
No comments:

Post a Comment