நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, October 16, 2014

திருப்பரிவட்டப் பாறைக்கு சமர்ப்பணம்

ராதேக்ருஷ்ணா ...
பாறை போல் திடமான மனதுடன் பகவானை நம்பி வாழவேண்டிய நாள் வந்தது...
இந்த நாளை திருக்குறுங்குடியில் இருக்கும் ஸ்வாமி இராமானுஜரின் திருப்பரிவட்டப் பாறைக்கு சமர்ப்பணம் செய்வோம்...

திருவனந்தபுரம் அனந்தபத்பநாப ஸ்வாமி கோயிலில், வைஷ்ணவ முறைப்படி பூஜா முறைகளை மாற்ற ஸ்வாமி இராமானுஜர் தீர்மானித்தார்...
அப்போது அங்கு தாந்திரீக முறைப்படி பூஜை செய்துகொண்டிருந்த போத்திமார்கள், பகவான் அனந்தபத்மநாபரிடம் சரணாகதி செய்தனர்...
அவர்களுக்காக ஸ்வாமி இராமானுஜரிடம் தூதுபோன அனந்தபத்மநாப ஸ்வாமி, திருவனந்தபுரத்தில் தாந்திரீக முறை பூஜையே நடக்கட்டும் என்று சொன்னார்....ஆனால் அதற்கு ஸ்வாமி இராமானுஜர் மறுத்துவிட்டதால், இரவோடு இரவாக அனந்தபத்மநாப ஸ்வாமி அவரை திருக்குறுங்குடியில் ஒரு பாறையில் கொண்டுவிட்டார்...
விடியும்போது விழித்த ஸ்வாமி இராமானுஜர் தான் அனந்தபத்மநாபனின் லீலையால் திருக்குறுங்குடியில் இருப்பதை உணர்ந்தார்...
உடனே தன் சிஷ்யன் வடுகநம்பியை நினைத்து "வடுகா" என்றழைத்தார்...
உடனே திருக்குறுங்குடி பெருமாள் சுந்தரபரிபூரண நம்பியே வடுக நம்பியாக வந்து ஸ்வாமி இராமானுஜரின் காவி வஸ்திரங்களைத் தோய்த்து, ஸ்வாமி இராமானுஜனுக்கு திருமண்ணும் இட்டுவிட்டார்...
ஹே திருப்பரிவட்ட பாறை பாகவதரே...
திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி, காரேய் கருணை ஸ்வாமி இராமானுஜர், திருக்குறுங்குடி சுந்தரபரிபூரண நம்பி என்று இவர்களின் திவ்ய சம்மந்தம் பெற்றவரே...
உம்மைப் போல அடியேனும் அனுபவிக்க என்னை உனது குழந்தையாக பாவியுங்கள்...

Radhekrishna...
A day has come to live with a strong heart like a rock and with the belief in bhagawan.... let's offer this day to thirupparivattappari rock of Swami Ramanuja at Thirukkurungudi....

Swami Ramanuja wanted to change the pooja rituals at Thiruvananthapuram Sri Ananthapadmanabha swami temple according to vaishnava style...
But the priests of padmanabhaswami temple surrrendered to Sri Ananthapadmanabha swami not to change from thaanthreega style to vaishnava style...
So on their behalf Sri Padhmanabha Swami approached Sri Ramanuja and made a request not to change the present thaanthreega style of pooja rituals....
But Sri Ramanuja didn't accept it...Hence Sri Padmanabha shifted Swami Ramanuja over night ,while he was sleeping and placed him on the rock at Thirukkurungudi...
when Swami Ramanuja woke up in the morning, he was surprised to see him lying on the rock in Thirukkurungudi but immediately he understood the leela of Sri Padhmanabha Swamy and called for his favourite desciple Vaduga Nambi...
Immediately Lord Sundara Paripurna Nambhi Himself appeared in front of Swami Ramanuja as Vaduga and attended to him like washing his saffron clothes, putting thirumann on his forehead etc...
Hey fortunate & blessed Vattappara rock.....
having got the divine relationship of Thiruvananthapuram Lord Sri Ananthapadmanabha swami, Swami Ramanuja and Thirukkurungudi Lord Sundhara Paripoorana Nambi ,please treat me as your child to enjoy this divine relationship…..




No comments:

Post a Comment