நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Thursday, October 16, 2014

பக்தி செய்யும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
எல்லா ஜன்மாவிலும் விடாமல் பகவானை அனுபவிக்கும்படியான பக்தி செய்யும் நாள் வந்தது....இந்த நாளை பகவான் ராமனுக்கு கைங்கர்யம் செய்த கரடி அரசன் ஜாம்பவானுக்கு சமர்ப்பிப்போம்...
ப்ரும்மதேவரே ஜாம்பவானாக அவதரித்தார்...
பகவான் வாமன அவதாரமெடுத்து உலகளந்த சமயத்தில், அவரை ஜாம்பவான் 3 முறை வலம் வந்தார்....
ராமாவதாரத்தில் சுக்ரீவனின் மந்திரியாக இருந்தார்....
அனுமானின் பலத்தை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவரை கடலைத்தாண்டி இலங்கைக்குச் செல்லவைத்தவர் ஜாம்பவானே...
க்ருஷ்ணாவதாரத்தில் 28நாட்கள் பகவான் க்ருஷ்ணனோடு ஸ்யமந்தகமணிக்காக ஜாம்பவான் சண்டையிட்டார்...
பகவான் க்ருஷ்ணனுக்கு தன் பெண்ணான ஜாம்பவதியை ஜாம்பவான் கல்யாணம் செய்துகொடுத்து, க்ருஷ்ணனுக்கு ஸ்யமந்தகமணியையும் கொடுத்தார்...
ஹே கரடிராஜா ஜாம்பவானே...
உங்களைப் போல், நானும் க்ருஷ்ணனோடு கட்டிப்பிடித்து சண்டை போட்டு, அவனிடம் அடி வாங்கித் தோற்க ஆசிர்வதியுங்கள்...

Radhekrishna. ...
A day to devote fully in all janmas has arrived...Let's offer this marvelous day to Sri Jambavan who did service to Lord Ram...
Jambavan is the incarnation of Lord Brahma...
Jambavan went around Lord Vamana 3 times when He measured the 3 worlds...
Jambavan was the advisor to Sugreeva...
Jambavan only reminded the power of Hanuman & instructed him to cross the ocean to reach Srilanka...
Jambavan did wrestling with Lord Krishna for 28 days...
Jambavan offered Syamanthaka Rathna & his daughter Jampavathi to Krishna....
Hey bear king Jampavan....please bless me to fight with Krishna like you & to lose to Krishna…
No comments:

Post a Comment