நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Tuesday, October 7, 2014

சரணாகதி செய்யும் நாள்

ராதேக்ருஷ்ணா ...
நம்முடைய தகுதியைப் பாராமல்,பகவானின் கருணையின் மீது நம்பிக்கை வைத்து, பகவானின் திருவடிகளில் பூரணமாய் சரணாகதி செய்யும் நாள் உதயமாகிறது...
இந்த அன்புமயமான திருநாளை, பகவான் ராமனிடம் சரணாகதி செய்த, நல்ல அரக்கனான விபீஷண ஆழ்வாருக்கு சமர்ப்பிப்போம்..
விபீஷணனை முன்னிறுத்தி, ராமன் "நான் உன்னைச் சேர்ந்தவன் என்று யார் என்னிடம் ஒரு முறை சரணாகதி செய்கிறாரோ, அவர்களுக்கு எல்லா விதத்திலும் அபயம் அளிக்கிறேன்...இது என்னுடைய விரதம்" என்று சரணாகதி அடையும் சுலபமான வழியைச் சொன்னார்....
விபீஷ்ண ஆழ்வாரின் பக்திக்கு வசப்பட்டு பகவான் ராமன், தன்னுடைய குல தெய்வமான ரங்கநாதரையே அவருக்குப் பரிசாகத் தந்தார்...
விபீஷ்ண ஆழ்வாரால்தான் நமக்கு ஶ்ரீ ரங்கராஜன் ஶ்ரீரங்கத்தில் குட திசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கிச் சயனித்து அருளுகிறார்...
பகவானின் ப்ரிய சகா விபீஷண ஆழ்வாரே...
அடியேனும் எல்லாவற்றையும் உதறித்தள்ளி, எம்பெருமான் திருவடிகளே கதி என்று விழ, தைரியத்தையும், குறைவில்லாத நம்பிக்கையும் தாருங்கள்...

Radhekrishna...
A day to rely on Lord's grace than our position has started. Let's offer this promising day to Sri Vibheeshana, dearest friend of Lord Ram...
Because of Sri Vibheeshana, Lord Ram revealed the secret of Total surrender as follows; " I will safeguard by all means,those who have surrendered to me once"....
For Sri Vibheeshana's devotion Lord Ram presented His Family deity Lord Ranganathan to him...
Lord Ranganatha residing in Srirangam & facing Sri Lanka for Sri Vibheeshana's sake...
Sri Vibheeshana Maharaja...
Give me brave & unconditional faith in Lord…No comments:

Post a Comment