நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Monday, October 20, 2014

White paper

ராதேக்ருஷ்ணா ....
ராம் க்ருஷ்ண ஹரி... வாசுதேவ ஹரி...
மனதைக் காகிதமாக்கி அதில் பகவானின் பெருமையை எழுதி வைக்கும் நாள் கிடைத்தது....
இந்த பக்திபூர்வமான நாளை சந்த் துகாராமின் கைப்பட்ட பரம பாவனமான காகிதத்திற்கு சமர்ப்பணம் செய்வோம்...
சந்த் துகாராம் தானே தன் கையால் அபங்கம் எழுதிய காகிதங்கள் பரம பாக்கியம் பெற்றவை....
சந்த் துகாராம் தான் எழுதிய அபங்கங்களை, ஒரு ப்ராம்மணர் தூக்கி எறியச் சொன்னார் என்பதற்காக எல்லாவற்றையும் இந்திரயாணி நதியில் எறிந்துவிட்டார்....
அந்த அபங்கம் எழுதின காகிதங்கள் எல்லாம் சில நாட்கள் கழித்து இந்திரயாணி நதியில் மிதந்து வந்தன. பக்தர்கள் எல்லோரும் பரவசத்துடன் அந்த காகிதங்களை பக்தியோடு எடுத்துக்கொண்டனர்....
அந்த பக்திமயமான அபங்க காகிதங்கள் இன்றும் தேஹு விட்டலன் கோவிலில் பொக்கிஷமாக இருக்கிறது....
சந்த் துகாராமின் கைகளில் பட்டு, அவரால் விட்டலன் பெருமைகளை பத்திரமாக சுமக்கும் பாக்கியம் மிகுந்த காகிதங்களே...
என் மனதையும் உங்களைப் போல நல்ல காகிதமாக்கி விட்டலன் மகிமையை சந்த் துகாராம் எழுத ஒரு பாக்கியம் அருளுங்கள்..
Radhekrishna. ...
Ram Krushna Hari...
Vasudeva Hari. ..
A day to make our mind as a white paper to write Lord Vittal's grace & love...
Let's offer this day to fortunate papers which were used by Santh Thukaram to write abhang about Lord Vittal...
Santh Thukaram wrote many Marathi abhangs on papers. ...
Once a jelousy brahmin scolded Santh Thukaram & insisted him to throw all his abhangs in Indrayaani river.
Santh Thukaram threw all the papers in Indrayaani river....
After few days those abhang papers floated in Indrayaani river. Devotees picked those papers as a special gift from Lord Vittal...
Those abhang manuscripts are preserved & kept in Dehu Vittal temple...
Hey fortunate Abhang Manuscripts of Santh Thukaram. ..
Please bless my mind to become a good paper... So it can be used by Santh Thukaram to write about Lord Vittal.....No comments:

Post a Comment