நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Tuesday, October 7, 2014

வரம் தரும் தினம்

ராதேக்ருஷ்ணா ....
எல்லா தடைகளையும் தாண்டி, எதற்கும் சளைக்காமல் பகவானை நோக்கிச் செல்லும் நாள் உதயமானது...
இன்றைய வரம் தரும் தினத்தை, பாகவதம் கொண்டாடின, நவ திருப்பதிகளையும் தன் மடி மேல் வைத்திருக்கும், வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மாதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம்...
ஸ்வாமி நம்மாழ்வாரும், மதுரகவி ஆழ்வாரும் தாமிரபரணி நதிக்கரையில் அவதரித்தவர்களே....
ஆழ்வார் திருநகரியில் இன்று நாம் சேவிக்கும் ஸ்வாமி நம்மாழ்வாரின் உற்சவ மூர்ர்த்தியும், இராமானுஜர் அவதரிக்கும் முன்பே கிடைத்த பவிஷ்யதாசார்யன் இராமானுஜ மூர்த்தியும், பக்தியுடன் நம் மதுரகவியாழ்வார் தாமிரபரணி நீரைக் காய்ச்ச, அதிலிருந்து கிடைத்தவர்கள்தான்...

"இதுவோ திருநகரி...ஈதோ பொருநை" என்று ஸ்வாமி இராமானுஜரே மேனி சிலிர்த்த உன்னத நதி தாமிரபரணியே ....
இன்றும் பொதிகை மலையில் பல சித்தர்கள் அனுபவிப்பது தாமிரபரணியையே ...
ஹே பலம் தரும் தாமிரபரணி மாதா....நீ அனுபவிப்பது போல், அடியேனும் ஆழ்வார்களையும், ஆசார்யர்களையும் அனுபவிக்க, நீ என்னை உன் அடிமையாக்கிக் கொள்...

Radhekrishna. ...
A day to cross all the obstacles & to enjoy Lord's special grace is started. ...
Let's offer this boon day to River Thaamirabharani Maathaa. ...
Srimadh Bhaagawatham tells that she is residing on the banks of Thaamirabharani& who drinks it's holy water will get pure devotion of Lord Narayana...
Swami Nammazhwar & Sri Madhurakavi Azhwar were born on the banks of Thaamirabharani. ...
The deities of Swamy Nammazhwar & Bhavishyadh Acharyan Swami Ramanuja were obtained by boiling Thaamirabharani river water with devotion by Sri Madhurakavi Azhwar...
Thamiram means copper. ..that's the reason behind the name Thaamirabharani 
Many great sages enjoying the divinity of Thaamirabharani. ..
Hey Thaamirabharani Maathaa. ..i want to enjoy the divine company of great Azhwars and wonderful Acharyas. ..So please accept me as your slave…No comments:

Post a Comment