நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Wednesday, October 1, 2014

Meditating day

ராதேக்ருஷ்ணா ...
யாரோடு இருந்தாலும் மனதை கண்ணனிடம் மட்டுமே பூரணமாகத் தரும் நாள் வந்தது...
இந்த தினத்தை வேலைக்காரியின் மகனான, ஹ்ஸ்தினாபுரத்தின் மந்திரியான, வேதவ்யாசரின் பிள்ளையான, உத்தமர் விதுரருக்கு சமர்ப்பணம் செய்வோம்....
மஹாபாபிகள் நடுவே வாழ்ந்திருந்தாலும், மனதில் க்ருஷ்ணனையே தியானித்திருந்தார் விதுரர் ...
க்ருஷ்ணன் அவதார லீலைகளை முடித்துக்கொண்டு வைகுந்தம் கிளம்பும் சமயத்தில் விதுரரை பார்க்க ஆசைப்பட்டான் என்றால் விதுரரின் பக்தியை என்னவென்பது !!!
பாண்டவர் தூதனாக வந்த கண்ணன், விதுரரிடம் வந்து கையேந்தி அவர் தந்த கூழைக் குடித்தான...
திருதராஷ்டிரனுக்கும் பாகவத ரஹஸ்யத்தைச் சொல்லி வைராக்கியம் வரச்செய்தவர் விதுரர்...
மைத்திரேயரிடம் பாகவத ரஹஸ்யம் கேட்டவர் விதுரர்...
ஹே விதுரரே...உம்முடைய அஹம்பாவம் இல்லாத க்ருஷ்ண பத்தியில் திளைக்கும் நல்ல மனதை எனக்கு தானமாய் தாருங்கள்...

Radhekrishna. ...
The day to think about Lord Krishna at any cost has just begun...
Let's offer this meditating day to Sri Vidhura. ...
Son of a Servant Maid...
Maha Manthri of Hasthinapuram....
Blessed son of Sri VedhaVyasa. ...
When Krishna came as a messenger of Pandavas, He came to Vithura's home and ate his porridge.
During His depart to Vaikunda, Lord Krishna thought about Vithura....
Because of Vithura, Dhrutharashtra & Ganthari attained Moksha. ..
Sage Mithreya revealed all the secrets of devotion & Lord to Vithura...
Hey Vithura Mahatma. ...
Please give your pure & perfect Krishna devoted mind to me….




No comments:

Post a Comment