நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...

நம்மை மஹான்களுக்கு அர்ப்பணிப்போம்...
Let's live everyday with great saints.

Sunday, October 26, 2014

சனாதன கோஸ்வாமிக்கு சமர்ப்பணம் ....

ராதேக்ருஷ்ணா ...
நம் உடலை வருத்திக்கொள்ளாமல் பக்தி செய்யும் நாள் வந்தது...
இந்த கோவர்த்தன பூஜா தினத்தை, தினமும் கோவர்த்தன கிரியை வலம் வந்த பாகவத பக்தன், க்ருஷ்ண சைதன்யரின் ப்ரிய சிஷ்யர் சனாதன கோஸ்வாமிக்கு சமர்ப்பணம் செய்வோம்....
சனாதன கோஸ்வாமி தனது தள்ளாத வயதிலும் விடாமல் கோவர்த்தன கிரியை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்....
ஒரு கோடைக் காலத்தில், வெய்யிலில் உடல் தளர்ந்து போய், கிரிவலப் பாதையில் களைத்து உட்கார்ந்தார்...
அப்போது அங்கே பகவான் க்ருஷ்ணர் ப்ரத்யக்ஷமாகி, தானே கோவர்த்தனத்தின் ஒரு சிறிய பாறையின் மீது நின்று,தன் திருவடி அடையாளங்கள் பதித்து சனாதன கோஸ்வாமிக்குத் தந்தார்...
அன்றிலிருந்து சனாதன கோஸ்வாமி அந்த கோவர்த்தன பாறையை தன் கடைசி காலம் வரை வலம் வந்தார்...
அந்த பவித்திரமான கோவர்த்தன பாறை இன்றும், வ்ருந்தாவனத்தில் ராதா தாமோதர் கோயிலில் இருக்கிறது... இந்தப் பாறயை 4 முறை வலம் வந்தால் கோவர்த்தன மலையை 1முறை வலம் வந்ததற்கு சமம்...
தள்ளாத வயதிலும், வைராக்கியத்தோடு கோவர்த்தன கிரி வலம் செய்த சனாதன கோஸ்வாமி மஹராஜ்...
அடியேனும் எல்லா ஜன்மங்களிலும் கோவர்த்தன கிரிவலம் மட்டும் செய்துகொண்டிருக்க அருளுங்கள்…

Radhekrishna. ....
A day to enjoy Lord Krishna's grace without straining our body & mind has arrived. ...

Let's offer this happy Govardhan Pooja day to Sri Sanathan Goswami (disciple of Sri Krishna Chaithanya Mahaprabu) who did Govardhana Giri Parikrama (round about) till his last breath....
Everyday Sri Sanathan Goswami used to do Govardhan Giri Parikrama even in his old age. During one hot sunny day in Giri Parikrama, he was so tired & sat on the Parikrama path...
At that time Krishna came & advised him to stop the tedious penance of Giri Parikrama at that old age. But Sanathan Goswami was not able to give up his vow of Giri Parikrama...
So Krishna stood on a small Govardhan Shila (rock) & started playing flute. Because of this extraordinary divine music the rock started melting & had the foot prints of Lord Krishna, hoof print of calf, imprint of Flute & imprint of cowherd Stick. Till his last breath, Sri Sanathan Goswami did Parikrama to this rock....
This sacred Govardhan Rock is still in Radha Damodhar temple in Vrindhavan. If you did 4 Parikrama to this Govardhan Shila (rock), it's equal to one Govardhan Giri Parikrama ( roughly 21 kms)...
Sri Sanathan Goswami Maharaj. ..please bless me to do Govardhan Giri Parikrama daily in all births…


No comments:

Post a Comment